YouTurn

கங்கனாவின் இரு ட்வீட்களை "வெறுப்பு பேச்சு விதிமீறல்" என நீக்கிய ட்விட்டர் !

கங்கனாவின் இரு ட்வீட்களை "வெறுப்பு பேச்சு விதிமீறல்" என  நீக்கிய ட்விட்டர் !
பாலிவுட் நடிகையான கங்கனா டெல்லியில் நடைபெற்று வரும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டம் குறித்து வெளியிட்ட ட்வீட் பதிவை பகிர்ந்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.



இந்நிலையில், " எங்கள் வரம்பு அமலாக்க விருப்பங்களுக்கு ஏற்ப ட்விட்டர் விதிகளை மீறும் ட்வீட்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் " எனக் குறிப்பிட்டு கங்கனா பதிவிட்ட இரு ட்வீட்களை ட்விட்டர் தளம் நீக்கி உள்ளது.





 

பிப்ரவரி 3-ம் தேதி சிரோமணி அகாலிதளம் கட்சியின் முன்னாள் தலைவர் மஞ்சித் சிங் ஜி.கே, விவசாயிகளுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக பாலிவுட் நடிகையின் கணக்கை நீக்குமாறு ட்விட்டருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியதாக டைம்ஸ்நவ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



நீக்கப்பட்ட ட்விட்களில் ஒன்று என ரோஹித் சர்மா பதிவை பகிர்ந்து வெளியிட்ட பதிவின் ஸ்க்ரீன்ஷார்டை NDTV செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சர்வதேச பாப் பாடகி ரிஹானாவை தாக்கி ட்வீட் வெளியிட்ட பிறகு டெல்லி விவசாய போராட்டம் பல ட்வீட்களை கங்கனா தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார். அதில், இரு ட்வீட்கள் ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி நீக்கப்பட்டு உள்ளது.

Links : 

Kangana Ranaut's two tweets on farmers' protest removed by Twitter for 'violating rules'

Twitter takes down Kangana Ranaut's tweets on farmers' protest over violations

kangana-ranauts-tweets-deleted-again-twitter-says-rules-violated
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை