YouTurn

காவல்துறை அதிகாரியை திட்டிய மாவட்ட ஆட்சியர் | வைரலாகும் வீடியோ !

கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரியை அம்மாவட்ட ஆட்சியர் பொது இடத்திலேயே கடுமையான வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு விஐபி-களுக்கு என்று உள்ள தனி பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதித்ததாக...

காவல்துறை அதிகாரியை திட்டிய மாவட்ட ஆட்சியர் | வைரலாகும் வீடியோ !
கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரியை அம்மாவட்ட ஆட்சியர் பொது இடத்திலேயே கடுமையான வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு விஐபி-களுக்கு என்று உள்ள தனி பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதித்ததாக காவல் ஆய்வாளர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையில் கடுமையாக வார்த்தைகளால் திட்டியதுடன், பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு விடுவதாக கூறியது வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.



" அப்படி என்னதான் தவறு செய்திருந்தாலும் மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் காவல்துறை அதிகாரியை இப்படி எல்லாம் தகாத வார்த்தைகளால் பேசுவது நியாயமா? அது சரி அந்த முக்கியமான vipனா யாரு கலெக்டர் ஐயா.. " என பல பதிவுகளில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



இது தொடர்பாக வெளியான செய்தியில், " காஞ்சி அத்திவரதர் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதிப்பதால் கூட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள், பக்தர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த சமயத்தில மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்கொண்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்ட பலரிடமும் விஐபி பாஸ் இல்லை என அறிந்து பிறகு ஆய்வாளரை கடுமையாக திட்டியதுடன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் " என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, சிறப்பு வழியில் அத்திவரதரை தரிசிக்க வழங்கப்படும் டோனர் பாஸ்களை போலியாக செய்து மக்களையும், பக்தர்களையும் ஏமாற்றும் செயல்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. 500 முதல் 1000 ரூபாய் விலையில் போலியான விஐபி பாஸ்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஜூலை மாதம் தெரிவித்து இருந்தார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை