YouTurn

"கலாம்" பெயரை மாற்றி போட்டால் என் பெயர் கூட வரும்-கமல்ஹாசன்

"கலாம்" பெயரை மாற்றி போட்டால் என் பெயர் கூட வரும்-கமல்ஹாசன்
மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரை திருப்பி போட்டால் என் பெயர் வரும் என கமல் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி பல ஊடகங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.


Archived link


அப்துல் கலாமிடம் அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்த பொன்ராஜ் அவர்கள் நேற்று கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்து கொண்டார். அப்போது பேசிய கமல் " கலாம் அவர்களின் பெயரில் தனது பெயரும் ஒட்டி கொண்டு இருப்பது தனக்கு பெருமைதான். கலாம் என்ற பெயரை மாற்றி போட்டால் எனது பெயர் கூட வரும்" என்று கூறினார். கீழ்காணும் காணொளியில் 4.50-ம் நிமிடம் அவர் கூறுவதை காணலாம்.


https://www.youtube.com/watch?v=sXWGShe9XVQ&t=92s

 

ஆனால், கலாம் பெயரை மாற்றி போட்டால் என் பெயர் வரும் எனக் கூறியதை பல செய்தி ஊடகங்களில் திருப்பி போட்டால் என்று கூறியதால் அது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. அதை வைத்து பல ட்ரோல் மீம்கள் வெளியாகின.

இந்நிலையில், YouTurn ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் அவர்களும் கூட கிண்டலாக ஒரு பதிவை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் உண்மை நிலை அறிந்த பின் அதை திருத்திக்கொண்டார்.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை