YouTurn

" கூட்டணி வதந்தியை நம்ப வேண்டாம் " - கமல் ட்விட்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி அமைக்கும் என நீண்ட நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இது தொடர்பான கேள்விகளும் அவ்வபோது கமல்ஹாசன் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை நிறுவும்...

" கூட்டணி வதந்தியை நம்ப வேண்டாம் " - கமல் ட்விட்.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி அமைக்கும் என நீண்ட நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இது தொடர்பான  கேள்விகளும் அவ்வபோது கமல்ஹாசன் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வர உள்ளதால் கூட்டணிக் குறித்த ஆலோசனைகள் இடம்பெறும் என பேசப்படுகிறது.



நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதால் திமுக, காங்கிரஸ் உடனான கூட்டணி நிச்சயம் இருக்கும் என செய்திகள் வெளியாகின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமல் ட்விட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.



" மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்த்துவோம். அது குறுகிய ஆதாயங்களுக்கு அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் " என பதிவிட்டு உள்ளார்.



கமலின் ட்விட் நாளை காங்கிரஸ், திமுக உடன் மக்கள் நீதி மய்யம் இணையும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளியே !

 

 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை