YouTurn

கோட்சே, மத வெறுப்பு என ஜேஎன்யூ புதிய து.வேந்தரின் வைரலாகும் பழைய ட்வீட்கள் !

கோட்சே, மத வெறுப்பு என ஜேஎன்யூ புதிய து.வேந்தரின் வைரலாகும் பழைய ட்வீட்கள் !
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தை துணை வேந்தராக பணியாற்றி வரும் சாந்திஸ்ரீ பண்டிட் ஜேஎன்யூ-வின் முன்னாள் மாணவர். முதல் முறையாக ஜேஎன்யு-வில் பெண் துணைவேந்த்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்ட பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்களின் படங்கள் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது.



வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அவர் நேரடியாக, விவசாயிகள் போராட்டங்களை விமர்சித்து இருக்கிறார். மேலும், சிஏஏ-விற்கு எதிரான சாஹீன் பாக் போராட்டக்காரர்களை " சட்டவிரோத ஜிகாதிகள் " என அழைத்தது மற்றும் போராட்டம் நடத்துவதற்கு பணம் பெறுவதாகக் கூறியது போன்றவை அவரின் சில சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு உதாரணம்.



Twitter link | Archive link 

ஒரு பதிவில், " கோட்சே உடைய சிந்தனையின் செயல் முக்கியமானது மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலையில் ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தீர்வைக் கண்டறிந்தது " எனப் பதிவிட்டு இருக்கிறார்.



2020-ல் சிஏஏ போராட்டத்தின் போது தமிழ்நாடு ஜிகாதிகளின் மற்றொரு கூடாரமாகி வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததையும் பார்க்க முடிகிறது.





இப்படி வலதுசாரி நிலைப்பாட்டுடன் கடந்த காலங்களில் மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும், மதவெறுப்பு கருத்துக்களை பதிவிட்ட சாந்திஸ்ரீ பண்டிட் உடைய பழைய ட்வீட்கள் எதிர்ப்புடன் தற்போது வைரலாகி வருகிறது. பழைய ட்வீட் பதிவுகள் கவனம் பெற்று வைரலாகி வருவதால் சாந்திஸ்ரீ பண்டிட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தையே நீக்கி இருக்கிறார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை