YouTurn

தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் எதிர் தாக்குதல் செய்ய இந்திய சட்டம் IPC Section 100 அனுமதிப்பதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தான...

தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் எதிர் தாக்குதல் செய்ய இந்திய சட்டம் IPC Section 100 அனுமதிப்பதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தான நிலையில் ஒரு நபர் தன்னை தற்காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் புரியும் உரிமையை வழங்குகிறது.



அதன்படி “ IPC Section 100 ” என்ற பிரிவின் கீழ், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், கடத்தல், ஆசிட் தாக்குதல் அல்லது ஆசிட் தாக்குதல் முயற்சியின் போது, பாலியல் வன்புணர்வு போன்ற ஆபத்தான நிலையில் எதிர் தாக்குதல் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற உயிர்க்கு ஆபத்தான தாக்குதலின் போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலோ, உடற்காயங்கள் ஏற்பட்டாலோ அது சட்டப்படி குற்றமாகாது. இந்த உரிமையை பெண்கள் மட்டுமல்லாமல் இந்திய குடிமகன் அனைவருக்குமானது என இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

தற்போதைய சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையாக மாறி வருவதை பெற்றோர்களும், பெண்களுமே புரிந்து கொள்ள வேண்டும். என் சுதந்திரம் என பேசுபவர்கள் குறைந்தபட்சம் உங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்துக் கொள்ளுங்கள்.

சட்டம் அறிந்து கொள்ளுங்கள் ! உங்களுக்கான பாதுகாப்பை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் !
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை