ட்விட்டர் விமர்சனங்களை நீக்க போராடும் அரசு, கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை - தி லேன்சென்ட்

பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாமல் இந்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகளும், மோடி அரசின் செயலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என விமர்சித்துள்ளது புகழ்பெற்ற மருத்துவ நாளேடான லேன்சென்ட்.

1823 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லேன்சென்ட் பத்திரிக்கை உலகெங்கும் பிரபலமான, மதிப்புமிக்க மருத்துவ பத்திரிகையாகும். கடந்த மே 8 2021ல் “இந்தியாவின் கோவிட் - 19 அவசரநிலை” எனும் தலைப்பில் ஒரு தலையங்க கட்டுரையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் தடுப்பூசி விநியோகம் மற்றும் செயல்முறை குறித்தும், இரண்டாம் கொரோனா அலை உச்சத்தை எட்டியபோதும் பாஜக அரசு மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும், மத கூட்டங்களை அனுமதித்தது குறித்தும் கடுமையாக சாடியுள்ளது.
“இந்தியாவில் கொரோனாவினால் பலியானோரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் 10 லட்சத்தை எட்டும் என்றும் அவ்வாறு நடந்தால் அது நரேந்திர மோடி அரசு இந்தியாவிற்கு வித்திட்ட “சுய பாதிப்புக்குள்ளான தேசிய பேரழிவு.” என குற்றம் சாட்டியுள்ளது.

மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, சுகாதார ஊழியர்களும், மருத்துவர்களும் பணிசுமையை தாங்க முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர், பலர் இறந்தும் உள்ளனர், ஆக்சிகனுக்காகவும், மருத்துவமனை படுக்கை வசதிக்காகவும் மற்றும் அடிப்படை தேவைகளுக்காகவும் மருத்துவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படும் செய்திகளால் சமூக வலைத்தளங்கள் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்திய சுகாதாரத்துறை அமைச்சரோ இரண்டாம் அலையின் ஆபத்து குறித்தும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்தும் பல முறை எச்சரிக்கைகள் விடுத்தபோதும் மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருந்த மெத்தனத்தில் “இந்தியா கொரோனா நோய் தொற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என பேட்டியளித்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.

மேலும், “சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்வுகளின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் மத விழாக்களை அனுமதித்தது, தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டது குறித்து உலகம் முழுவதும் விமரித்துக்கொண்டிருந்த பொழுது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ட்விட்டரில் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குவதில் அதிக விருப்பம் கொண்டதாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளது.
“கொரோனா மீது மோடி அரசிற்கு இருந்த மெத்தன போக்கால் முக்கியமான தடுப்பூசி பிரச்சாரத்தின் மீதும் கவனம் செலுத்தாமல் விட்டது. இதனால் மாநில மட்டத்திலும் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டங்கள் எல்லாம் ஸ்தம்மித்து போனது. வெறும் 2% மக்கள் தொகைக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களுடன் தடுப்பூசி கொள்கைகள் குறித்து முறையான விவாதிக்காமல், தடுப்பூசியின் கடும் தட்டுப்பாடு குறித்து தெளிவான பார்வை இல்லாமல் திடீரென்று 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்தது மேலும் தட்டுப்பாட்டையும், பொதுமக்களுக்கு குழப்பதையுமே உண்டாக்கியது.
இந்தியாவின் இந்த கொரோனா நெருக்கடி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டது. உத்தர பிரதேசமும் , குஜராத்தும் திடீர் கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமலும், மருத்துவமனையில் இடம் இல்லாமலும் தகன மேடைகள் பிணங்களால் நிரம்பி வழிந்தும் ஒரு மோசமான நிலையை எட்டியது. இதில் உத்தர பிரதேச மாநிலம் சமூக வலைத்தளங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்காக வேண்டுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. ஆனால் கேரளா , ஒடிசா போன்ற மாநிலங்கள் தேவையான ஆக்சிஜன்களை தயாரித்து இரண்டாம் அலையை சிறப்பாக எதிர்கொண்டன” என லேன்சென்ட் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இரண்டு அறிவுரைகளை வழங்கி உள்ளது லான்செட். அவை பின்வருமாறு,
1. வெளிநாடுகளில் இருந்து வரும் தடுப்பூசிகள் உட்பட தடுப்பூசி விநியோகிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அவற்றை நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் சிறிய மற்றும் குறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேகமாக சென்றடைய செய்யவேண்டும். இந்தியாவின் 65% சதவீத மக்கள் தொகை அங்குதான் உள்ளது.
2. அதே சமயத்தில் SARS-CoV-2 நோய் தொற்றை முடிந்தவரை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். கொரோனா தொற்றின் பரவல் குறித்து உண்மையான தரவுகளை வெளியிட்டு மக்களுக்கு நிலைமையை உணர்த்த வேண்டும். மாநில அரசாங்கங்கள் நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன, ஆனால் சமூக விலகல், தனிமைப்படுத்துதல், பொது இடங்களில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
“சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் கூறியபடி 10 லட்சம் இறப்புகளை இந்தியா சந்திக்க நேரிட்டால் அது நரேந்திர மோடி அரசு இந்தியாவிற்கு வித்திட்ட “சுய பாதிப்புக்குள்ளான தேசிய பேரழிவாகவே” இருக்கும். மத்திய அரசு இப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்கான திட்டத்தை மறுபரிசீலனை செய்து இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரவேண்டும். அந்த முயற்சிக்கான வெற்றியைப் பெற அரசாங்கம் தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, பொறுப்பான தலைமையுடன் அறிவியல் பூர்வமாக வெளிப்படையாக செயல்பட்டால் மட்டுமே முடியும்”. என லேன்சென்ட் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.