இந்திய வான்படை தாக்குதல் தொடர்பாகப் பரவும் வதந்திகள் !
பாகிஸ்தான் எல்லையோரத்தில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்படை குண்டு மழைப் பொழிந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்தியா நடத்திய தாக்குதல் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அதிகளவில் வதந்திகளே பரப்பப்படுகின்றன. பல வதந்திகள் பற்றி எழுதி உள்ளோம் வரிசையாக படிக்கவும். பாகிஸ்தான்...

பாகிஸ்தான் எல்லையோரத்தில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்படை குண்டு மழைப் பொழிந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்தியா நடத்திய தாக்குதல் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அதிகளவில் வதந்திகளே பரப்பப்படுகின்றன. பல வதந்திகள் பற்றி எழுதி உள்ளோம் வரிசையாக படிக்கவும்.
இந்தியா நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டார் என பரவி வருகிறது.

செய்தி : FAKE
இம்ரான் கான் காயத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரென்ட் ஆகி இறந்து விட்டதாக பகிர்ந்து வருகின்றனர். இந்திய வான்படை தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் எல்லையோரத்தில் மட்டுமே. அதன் எதிரொலியால் இம்ரான் கான் சுட்டுக் கொல்லப்பட்டார் என வந்தியைப் பரப்பி உள்ளனர்.
2013-ல் லாகூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் இருந்து இம்ரான் கான் கீழே விழுந்தக் காரணத்தினால் பாதுகாப்பு வீரர்கள் அவரை தூக்கிச் சென்றுள்ளனர். அது தொடர்பான வீடியோ youtube-ல் இடம்பெற்றுள்ளது.

ஆனால், 2018 ஜனவரியில் இதே வீடியோவை வைத்து இம்ரான் கான் தாக்கப்பட்டார் எனவும் வதந்திகள் பரவி இருந்தது. ஆக, பிரச்சார மேடையில் இருந்து கீழே விழுந்த காரணத்தினால் தலையில் இரத்தம் வரும் புகைப்படத்தை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்தியாவில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : Surgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் !
இனி வருவது ...
2. தாக்குதலை கொண்டாடிய இந்திய ராணுவம் :

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு அதனை கொண்டாடும் விதத்தில் ராணுவ வீரர்கள் நடனமாடிக் கொண்டாடினர் என இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
செய்தி : Fake
இந்திய விமானத் தாக்குதலுக்கு பிறகு ராணுவ வீரர்கள் கொண்டாடியதாக பரவும் வீடியோ தவறானது மற்றும் சில மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஆகும்.

2018 டிசம்பரில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய 7th சீன-இந்திய கூட்டுப் பயிற்சி முடிந்த பிறகு இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
இந்திய-சீன ராணுவ வீரர்கள் நடனமாடிய வீடியோவை ADG PI- Indian army தன் ட்விட்டர் பக்கத்தில் 2018 -ல் பதிவிட்டு உள்ளது.
ஆதாரம் :
WATCH: Indian and Chinese troops perform bhangra after joint military exercise
3. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் :

இந்தியா பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் எல்லைப் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் இறந்துள்ளனர். அவர்களின் புகைப்படங்களே இது எனக் கூறி இப்படங்கள் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.
செய்தி : Fake

2014-ல் பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்கள் மீது நடத்திய தாக்குதலில் 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடலை வரிசையாக வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 2014 டிசம்பரில் MQM Television-ல் பதிவிடப்பட்டு இருந்துள்ளது.

பெஷாவர் தாக்குதல் குறித்த செய்திகளிலும், மேலும் பல ட்விட்டர் பக்கங்களில் தாலிபான் பயங்கரவாதிகள் 32 பேர் உடல்கள் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய தாக்குதல்கள் குறித்து யார் பதிவிட்டாலும் குறைந்தபட்சம் அவை உண்மையா என யோசித்து பின் பகிரவும்.
ஆதாரம் :
Peshawar review: Bombing civilians, torture and extra-judicial killings, major factors leading to army school massacre
4. தாக்கப்பட்ட இடம் & இறந்த மக்கள் :

பாகிஸ்தானில் காலி இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு கூறியது, ஆனால், தாக்குதல் நடத்திய இடம் இது தான், தாக்குதலில் இறந்தவர்களின் புகைப்படங்கள் என இந்த பதிவு அதிகம் பகிரப்படுகிறது.
செய்தி : Fake
உருக்குலைந்த இடம், இறந்து கிடக்கும் மக்கள் என நாம் பார்க்கும் படங்கள் உண்மையில் பால்கோட் பகுதியில் எடுக்கப்பட்டவைதான். ஆனால், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இவ்வாறு மாறவில்லை.

2005-ல் அக்டோபர் 11-ம் தேதி பாகிஸ்தானில் பால்கோட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்த மக்களின் உடல்கள் மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்டவையே இப்படங்கள். இந்த நிலநடுக்கத்தில் இந்திய காஷ்மீர் மக்களும் இறந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் இறந்த மக்களையும், பாதிக்கப்பட்ட பகுதியையும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் நிகழ்ந்தது என ஓர் இழிவான வதந்தியை பரப்பி வருகின்றனர். பழி வாங்கும் உணர்வு இருந்தாலும், உண்மை என்னவென்று தெரியாமல் இது மாதிரியெல்லாம் வதந்தியை பரப்புவது தவறாகும்.
ஆதாரம் :
Earthquake Death Toll Reaches 38,000 In Pakistan
Pakistani residents line up the bodies o
5. தாக்குதல் நடத்திய IAF வீரர்கள் :

படத்தில் இருக்கும் வீரர்கள் தான் பாகிஸ்தான் சென்று தாக்குதல் நடத்தி விட்டு வந்த நம் இந்திய IAF விமானிகள்.
செய்தி : Fake
இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி சிந்து, தேஜஸ் என்ற விமானத்தின் முதல் பெண் இணை விமானியாக பறந்தார். 2019 பிப்ரவரி 24-ல் பி.வி சிந்து இணை விமானியாக தேஜஸ் விமானத்தை " Areo india show " வில் இயக்கியது பற்றி செய்திகளில் வெளியாகி உள்ளன.

விமானி உடையில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, commander சித்தார்த் சிங் இருக்கும் படம் செய்தியிலும் வெளியாகி இருக்கிறது. அப்படங்களே, பாகிஸ்தான் சென்று தாக்குதல் நடத்திய IAF வீரர்கள் என தவறாக பரவி வருகிறது.
ஆதாரம் :
PV Sindhu first woman to co-pilot Tejas in Aero India show
- பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் மரணம் :