YouTurn

இந்திய தேசியக் கொடியில் "Made In China".. தேசியக் கொடிக்கு அவமதிப்பு என எழும் கண்டனங்கள் !

இந்திய தேசியக் கொடியில் "Made In China".. தேசியக் கொடிக்கு அவமதிப்பு என எழும் கண்டனங்கள் !
ஆகஸ்ட் 22 முதல் 26-ம் தேதி வரை கனடா நாட்டின் ஹலிஃபக்ஸ் பகுதியில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், இந்தியாவின் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநில சட்டமன்ற சபாநாயகர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த மாநாடு நடைபெற்ற பகுதியில் இந்திய சபாநாயகர்கள் பேரணியாக சென்ற போது, அவர்கள் பயன்படுத்திய இந்திய தேசியக் கொடியில் " Made In China " என டக் இருந்தது சர்ச்சையாகி வருகிறது.



Archive link 

சபாநாயகர்கள் கையில் இருந்த தேசியக் கொடி, 100 சதவீதம் பாலிஸ்டர் துணியில் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக டக் இடம்பெற்று இருக்கிறது. தேசியக் கொடியில் Made In China இடம்பெற்றது மாநில சபாநாயகர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டு உள்ளனர்.





மேலும் படிக்க : பாலிஸ்டர் தேசியக் கொடிக்கு அனுமதி, ஜி.எஸ்.டி விலக்கு.. உலகின் மிகப்பெரிய பாலிஸ்டர் தயாரிப்பாளர் ரிலையன்ஸ் !

சமீபத்தில்தான், இந்தியாவில் கைத்தறி முறையில் மற்றும் பருத்தி உள்ளிட்ட துணியில் தயாரிக்கப்பட்டு வந்த தேசியக் கொடியை பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்க அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், அயல்நாட்டில் இந்திய மக்களவை மற்றும் மாநில சபாநாயகர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர் தேசியக் கொடியைப் பயன்படுத்தியது கடும் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சார்பில் மாநாட்டில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு, " தேசியக் கொடியில் Made in china என்கின்ற வாசகம் இடம்பெற்றது உண்மைதான். நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்த போது, கையில் இருந்த கொடியை பார்த்தோம், " Made in china" என இருந்தது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்த போது அவர் சிரித்துக் கொண்டார். ஆனால், சபாநாயகர் அனைவருக்கும் வேதனை இருந்தது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை பொருத்தவரையில் ஈரோடு, சிவகாசி, கரூர், நாமக்கல் பகுதியில் நிறைய பிரஸ் இருக்கு, இரவு சொன்ன காலையில் 100 கோடி தேசியக் கொடி கூட அடித்து தர முடியும். இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என தெரியவில்லை " எனத் தெரிவித்து இருந்தார்.

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் மக்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி இருந்தார். சுதந்திர தினம் முடிந்து 1௦ நாட்களில் கனடா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தி இருப்பது இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை