அதிக இணைய முடக்கத்திற்கு ஆளாகும் பாஜக ஆளும் மாநிலங்கள் - ஆய்வறிக்கை !

இணைய முடக்கத்தில் இந்தியா பல ஆண்டு கால முன்னோடி! கடந்த 5 ஆண்டுகளில், இந்திய நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இணைய முடக்கங்களின் எண்ணிக்கை இந்தியாவை உலக அரங்கில் முதல் இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இணைய முடக்கம் என்பது கருத்துரிமைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒரு செயலாக கருதப்பட்டாலும், போராட்டங்களைக் கட்டுப்படுத்த, கலவரத்தை தடுக்க, பதற்றமான சூழ்நிலையைக் குறைக்க என பல காரணங்களின் பெயரில் உலகில் உள்ள பல நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துக்கொண்டு தான் வருகின்றனர். 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அரசு 109 முறை இணையத்தை முடங்கி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஏமன் நாட்டில் 2020ல் நடைபெற்ற இணைய முடக்கத்தின் எண்ணிக்கை வெறும் 6 மட்டுமே !
மேலும் படிக்க : இன்டர்நெட் சேவையை முடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் !
மற்ற நாடுகளைக் காட்டிலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்த இணைய முடக்கம் குறித்தான விரிவான ஒரு கட்டுரையை யூடர்ன் வெளியிட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை இணைய முடக்கம் என்பது, காஷ்மீருக்குள் நடக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 100 நாட்கள், 200 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டது, 18 மாதங்கள் அதிவேக இணைய சேவை (4G) முடக்கப்பட்டது, இதுவரை உலகிலேயே அதிக நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்ட இடம் என இணைய முடக்கம் ஜம்மு காஷ்மீருக்கு சொந்தமானது போல் அங்கு இந்திய அரசு செயல்பட்டு கொண்டிருப்பதால் இந்த பார்வை இயல்பானதே.
ஆனால், இந்தியா முழுவதும் இணைய முடக்கம் நடந்துகொண்டே தான் உள்ளது. கடந்த 2018 ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றதை அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது தமிழ்நாடு அரசு. இப்படி தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் இணைய முடக்கங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.
சமீப காலமாக இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் இந்த இணைய முடக்கத்தை ஆய்வு செய்த ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் கிரிஸ் ருய்க்ரோக் “Understanding India’s Troubling Rise in Internet Shutdowns” எனும் தலைப்பில் தன் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இணைய சேவை முடக்கத்திற்கு பின்னால் உள்ள காரணங்களாக இவ்வறிக்கை குறிப்பிடுபவை :
கடந்த 2012 முதல் 2020 வரை இந்தியாவின் இணைய முடக்கம் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில செய்திகள் பின்வருமாறு ;

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக இணைய சேவை முடக்கங்களால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் (பாஜக ஆளும் மாநிலங்கள் vs பிற மாநிலங்கள் ) ஒப்பீடு :

பல்வேறு விதமான போலி செய்திகள், அரசியல் அல்லது சமூக ரீதியாக நிகழ்ச்சி நிரலின் (agenda) அடிப்படையில் பகிரப்படும் செய்திகள் என இணைய பயன்பாட்டில் குறைபாடுகள் இருந்தாலும், இணையம் பாகுபாடு இல்லாமல் சாமானிய மனிதனுக்கு அளிப்பது தன் அடிப்படையான பேச்சுரிமை மட்டுமன்றி அதனை உலகம் கவனிக்கும் ஒரு தளத்தில் வெளிப்படுத்தும் சக்தியையும் அளிப்பதுமே.
செய்தி தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் ஏற்படுத்திக்கொடுக்காத, இணையம் கொடுத்த இந்த தொடர்பு முக்கியமான ஒரு அரசியல் கருவியாக உலகம் முழுவதும் பார்க்கப்படுவதற்கான காரணமே மக்கள் தங்களது சூழ்நிலைகளையும் , குறைபாடுகளையும், அரசின் மீதான அதிருப்தியையும் வெளிக்கொணர ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிகரித்து வரும் இணைய முடக்கத்தின் எண்ணிக்கைகள் இந்தியாவை தொடர்ந்து முதலிடத்திலேயே தக்க வைத்து வருகிறது.
Link :
Understanding Indias Troubling Rise in Internet Shutdowns

- ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கும், அக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஏற்படும் மனித உரிமை மீறல் குறித்த செய்திகளை தடுப்பதற்கும்.
- தேர்தல்களை சுற்றியும் இந்த இணைய சேவை முடக்கம் ஒரு சிறிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
- அரசியல் ரீதியாக உரிமைகோரும் இயக்கங்களை அடக்குவதற்கு.
- சாதி, மதம் போன்ற வகுப்புவாத பிரச்சனைகளின் போது.
- பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில அதிகாரிகளின் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட கருவியாக ‘accepted tool’ இணைய முடக்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2012 முதல் 2020 வரை இந்தியாவின் இணைய முடக்கம் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில செய்திகள் பின்வருமாறு ;

- 2020 செப்டம்பர் வரை கடந்த ஆண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரில் இதுவரை 230 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த டிசம்பர் 2019ல் அதிகபட்சமாக இந்திய முழுவதும் 87 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் தென் மாநிலங்கள் இணைய முடக்கத்தை மிக அரிதாகவே எதிர்கொள்கின்றனர், மாறாக இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முடக்கம் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது.

- ஜம்மூ காஷ்மீருக்கு அடுத்தப்படியாக இணைய சேவை முடக்கத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.

- இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட இந்த இணைய முடக்கம் பெரும்பாலும் மொபைல் போன் இணைய சேவையை குறிவைக்கிறது. ( (2015 இல் 29% , 2016 மற்றும் 2017 இல் 65%, 2018 இல் 94% மற்றும் 2019 இல் 92% முடக்கம் ). இந்திய இணைய பயனர்களில் கிட்டத்தட்ட 97% பேர் மொபைல் நெட்வொர்க்கை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இணைய சேவையை முடக்கம் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என்பதால் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறை பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளது. CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது அறிவிக்கப்பட்ட 19 இணைய சேவை முடக்கத்தில், 14 பாஜக ஆளும் மாநிலங்களில் உத்தரவிடப்பட்டது.
- இந்தியாவின் குறைந்தது 25 இணைய முடக்கங்கள் மத ஊர்வலத்தின் ஒரு மாதத்திற்கு முன்பாகவோ, ஊர்வலத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு நிகழ்த்தப்பட்டுள்ளன. இது போன்ற முடக்கங்கள் அதிகம் நிகழ்த்தப்பட்ட பகுதிகளாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. 25ல் 19 இணைய முடக்கங்கள் பாஜக ஆளும் மாநிலங்களால் விதிக்கப்பட்டவை. எவ்வாறாயினும், இந்த புள்ளிவிவரங்கள் மத ஊர்வலங்களால் தூண்டப்பட்ட உண்மையான இணைய முடக்கத்தின் எண்ணிக்கையை குறைத்தே மதிப்பிடுகின்றன, ஏனெனில் அனைத்து இணைய முடக்கத்திற்கும் செய்தி அறிக்கைகள் வெளியாவதில்லை.
இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக இணைய சேவை முடக்கங்களால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் (பாஜக ஆளும் மாநிலங்கள் vs பிற மாநிலங்கள் ) ஒப்பீடு :
- பாஜக ஆளாத மாநிலங்களில் ஒரு மாதத்திற்கு இணைய முடக்கத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை 20க்கும் கீழ். பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சராசரி எண்ணிக்கை மாதத்திற்கு 2.7 ஆகும்.

- மாறாக, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள 40 மாவட்டங்கள் நான்கு மாதங்களில் இணைய முடக்கத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சராசரி எண்ணிக்கை மாதத்திற்கு 9.6 ஆகும். (மற்ற மாநிலங்களை விட 3.5 மடங்கு அதிகம்.)
- எந்த ஒரு மாதத்தை எடுத்துக்கொண்டாலும் , ஒரு பாஜக ஆளும் மாவட்டத்தில் இணைய முடக்கம் நிகழ்தகவு (probability) 3% ஆகும், அதே நேரத்தில் பாஜக ஆளாத மாநிலத்தில் இது 0.8% ஆகும்.