YouTurn

ராஜபக்சேவை இந்தியாவிற்கு அனுப்பவில்லை, இந்தியா ராணுவத்தை அனுப்பாது : இந்திய தூதரகம் !

ராஜபக்சேவை இந்தியாவிற்கு அனுப்பவில்லை, இந்தியா ராணுவத்தை அனுப்பாது : இந்திய தூதரகம் !
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்நாட்டு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக, இலங்கையின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அந்நாடு முழுவதும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, அவர் இந்தியாவிற்கு சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதை மறுத்து உள்ளது.



Twitter link 

மே 10-ம் தேதி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், "  குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதை உயர் ஆணையரகம் மறுக்கிறது. இது போலியான மற்றும் பொய்யான அறிக்கை, இவ்வாறன செய்திகளை கடுமையாக மறுக்கிறோம் " என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.







அதுமட்டுமின்றி, இன்று (மே 11 தேதி) மற்றொரு பதிவில், " இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊக அறிக்கைகளை உயர் ஆணையரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற கருத்துகள் இந்திய அரசின் நிலைபாட்டுடன் ஒத்துப்போகவில்லை. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்பிற்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நேற்று தெளிவாக தெரிவித்து உள்ளார் " என இந்திய தூதரகம் பதிவிட்டு இருக்கிறது.

.

மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலையின் கடற்படை தளத்தில் உள்ள pillow house எனப்படும் மாளிகையில் தஞ்சம் புகுந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிற நிலையில், நாட்டின் அரசியலிலும், பொருளாதரத்திலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற கேள்விகள் எழுந்து வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை