இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலை கஞ்சா போதையில் ரகளை எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு சிலர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆட்டோக்கள் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாகச் செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் கஞ்சா போதையிலிருந்த இளைஞர்கள் இப்படிச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு மாதவரம் பால்பண்ணை காவல் துறையினர் விசாரித்து வருவதாகச் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துக் காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 28ம் தேதி இரவு 11.30 மணியளவில் பெரிய மாத்தூர் சேர்ந்த அன்பு என்பவரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ், ஆகாஷ், வினோத், திருமால் ஆகியோர் தாக்கியுள்ளதாகவும் அதற்குப் பதில் தாக்குதல் நடத்த அன்புவின் நண்பர்கள் பிரகாஷ், கிருஷ்ணா, சிவா, லாரன்ஸ் ஆகியோர் வந்துள்ளனர்.
அன்புவை தாக்கிய நபர்கள் அங்கு இல்லாத காரணத்தினால் அவர்கள் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தினர். மேலும் இச்சம்பவத்திற்குக் கஞ்சா போதை காரணம் இல்லை என்றும் இது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனை என்றும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறை கைது செய்து விசாரித்தும் வருகிறது.
மோதல், அடிதடி மாதிரியான சம்பவங்கள் நடந்தால் அது கஞ்சா போதையில் தான் நடந்தது என ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படிதான் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதும் கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதாகத் தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலாகும்.
மேலும் படிக்க : ‘தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்’, ‘காலை உணவுத் திட்டம்’ பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!
இதற்கு முன்னர் தமிழ்நாடு கஞ்சா மற்றும் போதைப் பொருளின் தலைநகராக உள்ளது என பாஜகவினர் பேசியுள்ளனர். அவை தவறான தகவல் எனத் தரவுகளுடன் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : குட்கா கடத்தலை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்.. பின்னணி என்ன ? தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா ?