YouTurn

H.ராஜா பேசியது என்ன?

 பாஜக தேசிய செயலாளர் H. ராஜா சமீபத்தில் உயர்நீதிமன்றத்தையும் காவல் துறையையும் மோசமாக விமர்சித்ததை அடுத்து அவர் நான்கு வாரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் உயர்நீதிமன்ற உத்தரவால் போலீசாரால் தடுக்கப்பட்ட போது  அவர்...

 பாஜக தேசிய செயலாளர் H. ராஜா சமீபத்தில் உயர்நீதிமன்றத்தையும் காவல் துறையையும் மோசமாக விமர்சித்ததை அடுத்து அவர் நான்கு வாரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதுக்கோட்டை விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் உயர்நீதிமன்ற உத்தரவால் போலீசாரால் தடுக்கப்பட்ட போது  அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 2:45 நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதில் "வெக்கமா இல்ல உங்களுக்கு யூனிபார்ம் போட, whole  police  is corrupt , போலீஸோட ஈரல் நூறு சதவீதம் அழுகி போச்சு சரி நான் ஒரு ஒரு இந்து வீடு வழியாக போவேன் முடிஞ்ச தடுத்து பாரு... High court  ஆவது மயிராவது... ஹிந்து விரோதி நீங்க... பாதிரியார் லஞ்சம் கொடுத்தா  என் கிட்ட கேளுங்க நான் தரேன் லஞ்சம்... High court  ஆவது மண்ணாங்கட்டியாவது... "  என ஆவேசமாக பேசி இருந்தார்.



இதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள்  எழுந்தன. எச். ராஜா அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது எனக்கூறினார். மறுபடியும் 6 நிமிடத்திற்கு மேலே மற்றொரு கோணத்தில் உள்ள வீடியோ வெளியாகி இருக்கிறது  அந்த வீடியோ கீழே :




 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை