YouTurn

குஜராத்தில் மர்ம உலோகமா ? ஏலியன் வேலை அல்ல, மனிதர்களின் விளம்பரம்!

குஜராத்தில் மர்ம உலோகமா ? ஏலியன் வேலை அல்ல, மனிதர்களின் விளம்பரம்!
பல நாடுகளில் தொடர்ச்சியாக தோன்றி உலக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மோனோலித் என அழைக்கக்கூடிய முப்பரிமாண வடிவில் பளபளவென்று இருக்கும் உலகத்தூண் இந்தியாவிலும் தென்பட்டதாக அதன் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிம்பொனி வன பூங்காவில் உலோகத்தூண் இருப்பதாக தகவல்கள் வெளியான பிறகு மக்கள் பலரும் அங்கு படையெடுத்து உள்ளனர்.



Facebook link | Archive link  

ஆனால், வைரலாகும் தூண் மர்மமான ஒன்றல்ல. அத்தகைய தூணில், எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், அதை பூங்காவின் நிர்வாகம் தான் நிறுவியும் உள்ளது. பார்வையாளர்களை அதிகம் கவரும் நோக்கத்தில் சிம்பொனி வன பூங்காவை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தின் சார்பில் உலகத்தூண் நிறுவப்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சியின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களின் உதவி இயக்குனர் திலீபாய் படேல் தெரிவித்து உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் 18-ம் தேதி அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வன விலங்குத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும் போது 10-12 அடி உயர உலோகத்தூணை கண்டனர். எனினும், உலோகத்தூண் குறித்த செய்தி வைரலான பிறகு அடையாளம் தெரியாத இருவர் அந்த தூணை நீக்கிய புகைப்படங்கள் வெளியாகின. 

இதன் பின்னர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ரொமானியாவிலும் உலோகத்தூண்கள் தென்பட்டதாக செய்திகளில் வெளியாகி மேலும் பரபரப்பு கூடியது. அதையடுத்து, பிரிட்டனின் ஐல் ஆஃப் விட் எனும் பகுதியில் மர்மமான தூண் தென்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த முறை உலோகத் தூணிற்கு பதிலாக கண்ணாடி தூண் நிறுவப்பட்டு இருந்தது.

இவ்விரு நாடுகள் மட்டுமல்லாமல், ரூமேனியா, பிரிட்டனில் உள்ள கிளாஸ்டன்பரி மற்றும் டார்ட்மோர், பெல்ஜியம், போலந்து, ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் என பல்வேறு நாடுகளின் நிலங்களில் அடுத்தடுத்து தூண்கள் முளைக்கத் துவங்கின.

பூமியில் தோன்றிய மர்ம உலோகத்தூண்கள் வேற்றுக்கிரகவாசிகளால் நிறுவப்பட்டதா அல்லது அவர்களின் வருகைக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற பல்வேறு கோணத்தில் செய்திகள் பரப்பப்பட்டன.


ஆனால், உலோகத்தூண் முதன் முதலில் தோன்றிய யூடா மற்றும் கலிஃபோர்னியா பகுதியில் உலோகத்தூண்களை நட்டுவைத்தது நாங்கள்தான் என " தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட் " எனும் குழு பொறுப்பேற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.



instagram link | Archive link 


யூடாவில் காணப்பட்ட உலோகத் தூணை 45,000 டாலர்களுக்கு விற்பனை செய்வதாக அக்குழு தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 3-ம் தேதி பதிவிட்டு உள்ளது. மேலும், உலோகத்தூண்களை தயாரித்தல், எடுத்துச் செல்தல் உள்ளிட்ட பல புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளனர்.



இதன் பிறகு, பிரிட்டனில் தோன்றிய கண்ணாடி தூணை வடிவமைத்த டாம் டன்ஃபோர்ட் என்பவர் யூடாவில் தோன்றிய உலோகத்தூணில் இருந்த ஆர்வத்தில் கண்ணாடி தூணை வடிவமைத்ததாக ஒப்புக் கொண்டார். நேஷனல் ட்ரஸ்ட்க்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட கண்ணாடி தூண் உடைந்த நிலையில் அதை நேஷனல் ட்ரஸ்ட் அப்புறப்படுத்தியதோடு உடைந்த பக்கங்களை இ-பே வலைதளத்தில் விற்பனைக்கும் வெளியிட்டது.




இப்படி 2020-ல் பூமியில் தோன்றிய மர்மமான தூண்களில் யூடா, கலிஃபோர்னியா, பிரிட்டனின் ஐல் ஆஃப் விட் உள்ளிட்ட பகுதியில் தோன்றியவை மனிதர்களால் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டவை என தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, உலகின் பல பகுதிகளில் மோனோலித் தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவின் குஜராத்திலும் மக்களை கவர்வதற்கு பூங்கா நிர்வாகமே உலோகத் தூணை நிறுவியுள்ளது.


மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி விளம்பரம், வியாபரம் செய்ய இதுபோன்ற யுக்திகளை கையாளுவது வழக்கம். இது ஏலியன் மர்மம் அல்ல, மனிதர்களின் விளையாட்டே !


Links :




monolith-solved-stunt-artists-take-responsibility


first-monolith-spotted-in-india-at-ahmedabad-park



பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை