YouTurn

மின் கட்டணம் உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பரவும் தவறான தகவல்கள்!

ஜூலை 15ஆம் தேதி மின் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.

மின் கட்டணம் உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பரவும் தவறான தகவல்கள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) கடந்த 15ஆம் தேதி மின் கட்டணத்தை முந்தைய விலையிலிருந்து 4.83 சதவீதம் உயர்த்தியது. இதுதொடர்பாக நமது தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இருப்பினும் மின் கட்டணம் உயர்வு குறித்துப் பல பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அவற்றை குறித்த உண்மையை இக்கட்டுரையில் காண்போம். 


அதிமுகவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,330 கட்டணம் இதுவே கூடுதலாக ஒரு யூனிட் பயன்படுத்தினால் (501 யூனிட்) ரூ.2,127 கட்டணமாக விதிக்கப்படுகிறது. ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்துவதால் ஆகக்கூடிய கூடுதல் செலவு ரூ.797 என ஸ்கிரீன் ஷார்ட் ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

X link

TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய மின் கட்டணங்களுக்கு ஏற்ப எத்தனை யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் என்பதை கணக்கீட்டு காண்பிக்க வழிவகையுள்ளது. அதனைப் பயன்படுத்தி 500 மற்றும் 501 யூனிட்டுக்கான கட்டணம் என்ன என்பதைக் கணக்கிட்டோம். 


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. அதுவும் Domestic பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு 500 யூனிட்டுக்குள், 500 யூனிட்டுக்கு மேல் என இரண்டு slab-களாக பிரித்து TANGEDCO கட்டணம் வசூலிக்கிறது. 


அதன் அடிப்படையில், 500 யூனிட்டுக்கான கட்டணம் ரூ.1,805 வசூலிக்கப்படுகிறது. 


1 - 100 யூனிட் = Rs.0 (விலையில்லா மின்சாரம்)

101 - 200 யூனிட் = Rs.235 (100 x 2.35)

201 - 400 யூனிட் = Rs.940 (200 x 4.70)

401 - 500 யூனிட் = Rs.630 (100 x 6.30)



இதுவே ஒருவர் 501 யூனிட் பயன்படுத்தினால் அதற்கான Slab மாறுபடும். அப்படி மாறுவதால் 501 யூனிட்டுக்கான கட்டணம் Rs.2,048.40/-


1 - 100 யூனிட் = Rs.0 (விலையில்லா மின்சாரம்)

101 - 400 யூனிட் = Rs.1,410 (300 x 4.70)

401 - 500 யூனிட் = Rs.630 (100 x 6.30)

501வது யூனிட் = Rs.8.40 (1 x 8.40)



இப்படி Slab மாறுவதால் ஏற்படும் கட்டண மாறுபாடு Rs.243.40/- மட்டுமே. 


இதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் (2021) 200 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.170-ஆக இருந்தது. அது தற்போது திமுக ஆட்சியில் 480 ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


X link


2021ல் அதிமுக ஆட்சியில் 200 யூனிட்டுக்கான கட்டணம் ரூ.150


1 - 100 யூனிட் = ரூ.0 (விலையில்லா மின்சாரம்)

101 - 200 யூனிட் = ரூ.150 (100 x 1.50)


2021


அதனைத் தொடர்ந்து TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தற்போதைய கட்டணம் குறித்தும் கணக்கிட்டோம். அதன்படி ஜூலை 15, 2024 மின் கட்டண உயர்வின்படி 200 யூனிட்டிற்கான கட்டணம் ரூ.235/-.


1 - 100 யூனிட் = ரூ.0 (விலையில்லா மின்சாரம்)

101 - 200 யூனிட் = ரூ.235 (100 x 2.35)




மேலே உள்ள அட்டவணையைப் பயன்படுத்தியோ அல்லது அதிகாரப்பூர்வ தளத்தின் உதவியுடனோ எத்தனை யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதை நீங்களே கணக்கீட்டு கொள்ளலாம். மின் கட்டணம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை