Fact Check செய்த போலி வீடியோவை தமிழ்நாடு காவல்துறை நீக்க சொன்னதா.. என்ன நடந்தது ?

செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய மௌலானா ஒருவர் இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதை இந்து செயல்பாட்டாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார் என வலதுசாரிகளால் பரப்பப்பட்ட பொய்யான, சித்தரிக்கப்பட்ட வீடியோ குறித்து ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனர் முகமது சூபேர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்துள்ளார்.
Twitter link | Archive link
இந்நிலையில், " முகமது சூபேர் ட்விட்டரில் பதிவிட்ட Factcheck வீடியோ இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவை மீறுவதாகக் கூறி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் தரப்பின் கோரிக்கையின்படி ட்விட்டர் சப்போர்ட்டில் இருந்து மெயில் அனுப்பப்பட்டு உள்ளதாக " தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூபேர் பதிவிட்டு இருக்கிறார்.
இதையடுத்து, போலிச் செய்திகளை கண்டறிந்து பதிவிட்ட பதிவை எப்படி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவை மீறுவதாக தெரிவிக்கலாம் என்றும், எப்படி Factcheck பதிவை நீக்க சொல்லலாம் என சமூக வலைதளங்களில் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசுக்கு எதிராக பல்வேறு பதிவுகள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
என்ன நடந்தது ?
வயதான முஸ்லீம் மதகுரு ஒருவர் இந்துப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தாகவும், அதை இந்து காவலர்கள் தடுத்ததாகவும் போன்ற போலி வீடியோவை மத வெறுப்பை தூண்டும் விதமாக பதிவு செய்து வரும் கிஷோர் கே சுவாமி என்பவர் ட்விட்டரில் பரப்பி இருந்தார். அதை நாமும் (Youturn) Fact check செய்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ
படிக்க : அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு
இந்நிலையில், நேற்று கிஷோர் கே சுவாமி பரப்பிய போலிச் செய்திகளின் தொகுப்பை நாம் வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையைக் கவனித்த காவல்துறை அந்தப் போலி வீடியோவை நீக்க கூறி ட்விட்டர் தரப்பிடம் கோரியுள்ளது.
கிஷோர் கே சுவாமியின் போலி செய்தியை வைத்து மத வெறுப்பை தூண்டும் அந்த வீடியோ நீக்கும் முயற்சியில், அந்த வீடியோவை இந்தியாவில் பதிவிட்ட அனைவருக்கும் இமெயில்(email) சென்றுள்ளது. இப்படிதான், அதை Fact check செய்த சூபேர் பதிவிற்கும் நடந்துள்ளது.
இதுகுறித்து யூடர்ன் தரப்பில் இருந்து தமிழ்நாடு காவல்துறையிடம் பேசுகையில், " மத வெறுப்பை பரப்பும் அந்த வீடியோவை ஒட்டுமொத்தமாக நீக்க ட்விட்டர் தரப்பிடம் கோரிக்கை வைத்து இருந்தோம். ஆனால், அது தவறுதலாக Fact check செய்த பதிவையும் நீக்கச் சொல்லி சூபருக்கு இமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. எங்களின் நோக்கம் Fact check செய்ததை நீக்குவது அல்ல. இதுகுறித்து நாங்கள் மீண்டும் ட்விட்டருக்கு தெரிவிக்கிறோம் " எனப் பதில் அளித்து உள்ளனர்.
Got an e-mail from @TwitterSupport, They have received a request from Cyber Crime Police, Tamil Nadu regarding my Twitter thread, they claim that my fact check tweets violates India's Information & Technology Act, 2000. 🤦🙆🤷 https://t.co/9TfaHKNvlj pic.twitter.com/g8nIIknK5u
— Mohammed Zubair (@zoo_bear) November 3, 2022