YouTurn

Facebook Location பற்றி தெரியுமா ?

ஃபேஸ்புக் வலைத்தளம் உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. பொழுதுபோக்கு காரணியாக மட்டுமே இருந்த ஃபேஸ்புக் தளம். தற்போது வியாபார நோக்கத்தில் முன்னேறிச் செல்வதை அதில் வரும் விளம்பரங்களை வைத்தே அறிய முடிகிறது.    இது ஒரு புறம் இருக்க ஃபேஸ்புக் வலைத்தளம் நமக்கு பாதுகாப்பா என்ற...

Facebook Location பற்றி தெரியுமா ?

ஃபேஸ்புக் வலைத்தளம் உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. பொழுதுபோக்கு காரணியாக மட்டுமே இருந்த ஃபேஸ்புக் தளம். தற்போது வியாபார நோக்கத்தில் முன்னேறிச் செல்வதை அதில் வரும் விளம்பரங்களை வைத்தே அறிய முடிகிறது. 



 



இது ஒரு புறம் இருக்க ஃபேஸ்புக் வலைத்தளம் நமக்கு பாதுகாப்பா என்ற சந்தேகம் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று எண்ணத் தூண்டியது. ஃபேஸ்புக் தரவுகள் மூலம் தனி நபரின் தேவை, விருப்பம், விவரங்கள் உள்ளிட்டவை அரசியல் காரணங்களுக்காக தவறான வழியில் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.  





இந்நிலையில், ஃபேஸ்புக் வலைத்தளம் உங்களின் தினசரி நடவடிக்கைகளை சேமித்து வருகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ? நீங்கள் செல்லும் இடம், அங்கு இருக்கும் நேரம் என உங்களின் பயண இடங்கள் மற்றும் செலவழிக்கும் நேரங்கள் வரை அனைத்தையும் location history-ல் சேமிக்கப்படுகிறது. 



இவ்வாறு சேமிக்க காரணம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களுக்கு தேவையானவற்றை எளிதாக தேடி பார்க்கவே என்று விளக்கம் அளித்தாலும்  location history சேமிப்பது பாதுகாப்பான ஒன்றா என்ற கேள்வி உள்ளது.  location history ON என்று இருந்தால் உங்களின் தினசரி நடவடிக்கை ஃபேஸ்புக் ஆல் சேமிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு OFF இல் இருந்தால் நல்லது. இல்லை என்றால் எத்தனை ஆண்டுகளாக ON இல் உள்ளதோ அத்தனை ஆண்டுகள் உங்களின் HISTORY சேமிக்கப்பட்டு இருக்கும்.  





உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் தானே உள்ளது இதனால் என்ன பாதிப்பு உள்ளது என்று கூற தோன்றும். இன்றைய காலத்தில் ஹக் செய்வது என்பது பெரிய காரியம் இல்லை. அதிலும், பெண்களின் கணக்குகள் ஹக் செய்யப்பட்டால் இதனால் அவர்களுக்கு பாதிப்புகள் நேரிடக் கூடும். 





ஆகையால், ஃபேஸ்புக் setting இல் சென்று location option-ஐ சரி பார்க்கவும். OFF இல் இருந்தால் நல்லது. இல்லையென்றால் OFF செய்து விடவும். உலகமே நவீனமாகி வருவதால் காலத்திற்கு ஏற்ப உங்களின் தரவுகள் திருடப்படுகின்றன. ஆக, ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் உள்ள குறைகளை அறிவது அவசியமான ஒன்று. 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை