EWS-க்கு ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் - உச்சநீதிமன்றம் கேள்வி !

இந்தியாவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என இந்திய உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஜூலை 29-ம் தேதி மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதமும், EWS-க்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இக்கேள்வியை எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம் நடராஜ், " EWS-க்கான வருமான உச்சவரம்பு " அரசின் கொள்கை சார்ந்த விசயம் " என்றும், தேசிய வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்ட முடிவு என தெரிவித்தார். மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் கிரீமி லேயருக்கான ஆண்டு வருமான அளவுகோல் ரூ. 8 லட்சம் ஆக உள்ளது. 2015-ல் கிரீமி லேயருக்கு 6.5 லட்சமாக இருந்தது, 2017-ல் 8 லட்சமாக உயர்த்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
வழக்கறிஞர் கே.எம் நடராஜ் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், " முன்னேறிய வகுப்பினரைப் பொறுத்தவரையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்கள் என்கிற கருத்தை இல்லை. எனவே, சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளுக்கான கிரீமி லேயர் உச்ச வரம்பு எப்படி இவர்களுக்கு(EWS) பொருந்தும் " எனக் கேள்வி எழுப்பினர்.
" 8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு நிர்ணயத்திற்கு அடிப்படை என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன ? ஏதேனும் விவாதம் இருந்ததா ? நாடு முழுவதும் 8 லட்சம் உச்ச வரம்பு என்று நீங்கள் கூற முடியுமா ? ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே வெவ்வேறு வாழ்க்கை செலவு இருக்கிறது. மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள், வேறு எந்த சிறிய நகரங்களை விட வெவ்வேறு வாழ்க்கைச் செலவுகளைக் கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் 8 லட்சம் வரம்பு எப்படி ஒரே மாதிரியாக இருக்கும் " என கேள்வி எழுப்பினர்.
சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளுக்கு (SEBC) விண்ணப்பித்த அதே வரம்பை பயன்படுத்த முடியாது என்பதால் EWS-க்கான வரம்பை அடைய என்ன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
EWS-க்கான 10% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இருப்பதாக தெரிவித்த கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு, " 103வது அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியை(EWS-க்கானது) பெரிய அமர்வு விசாரித்து வருகிறது, தற்போதைய அமர்வு சட்டத்தை செயல்படுத்துவதை மட்டுமே விசாரித்து வருவதாக நீதிபதி சந்திரசூட் தெரிவித்து இருந்தார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையை செயல்படுத்த அனுமதித்தது மற்றும் EWS பிரிவிற்கு ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு நிர்ணயித்தற்கான அடிப்படை என்ன என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசிற்கு உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
Links :
NEET-AIQ : Supreme Court Questions Rs 8 Lakh Criteria For EWS; Asks How Can It Be Applied Uniformly Across Country
explain-basis-of-fixing-rs-eight-lakh-limit-to-determine-ews-for-neet-supreme-court-asks
Supreme Court questions ₹8 lakh income limit for EWS quota