YouTurn

இந்தியாவில் இறக்குமதி வரி ரொம்ப அதிகம் - எலான் மஸ்க் மதன் கெளரிக்கு பதில் ட்வீட் !

இந்தியாவில் இறக்குமதி வரி ரொம்ப அதிகம் - எலான் மஸ்க் மதன் கெளரிக்கு பதில் ட்வீட் !
பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " டெஸ்லா கார்களை இந்தியாவில் விரைவில் தொடங்குமாறு எலன் மஸ்க் அவர்களை டக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.



Twitter link | Archive link

" நாங்களும் அதை செய்ய விரும்புகிறோம். ஆனால், இறக்குமதி வரிகள் என்பது உலகிலேயே எந்தவொரு பெரிய நாட்டையும் விட மிக உயர்ந்தவை. மேலும், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் கூட டீசல் அல்லது பெட்ரோல் போலவே கருதப்படுகின்றன. இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிக கட்டண நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் " என எலன் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.



எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதில்கள் வருவது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்லா கார் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் போது எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில்கள் வந்துள்ளன.



Twitter link 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை பெரிய அளவில் குறைக்க கோரி எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இது குறித்து டெஸ்லா இன்க் தரப்பில் இருந்து இந்திய அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

" இந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட டெஸ்லா, இந்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், டெஸ்லா கார்களை இறக்குமதி செய்வதற்கான கூட்டாட்சி வரிகளை 40% ஆக குறைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய விலையில் 40,000 டாலர்கள் மேல் உள்ள கார்களுக்கு 100% மற்றும் 40,000 டாலர்களுக்கு 60% ஆக உள்ள வரியுடன் ஒப்பிடப்பட்டு கூறப்பட்டு இருக்கிறது.

டெஸ்லாவின் அமெரிக்க வலைதளத்தின்படி, மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் பிளஸ் என்ற ஒரே ஒரு மாடல் மட்டுமே 40,000 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான விலையில் உள்ளது.

இந்தியாவின் போக்குவரத்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி மார்ச் மாதம் ராய்ட்டர்ஸிற்கு அளித்த தகவலில், டெஸ்லாவின் உற்பத்தி செலவு சீனாவில் இருப்பதை விட குறைவாக இருப்பதை உறுதி செய்ய சலுகைகள் வழங்க இந்தியா தயாராக இருக்கும், ஆனால் அது உள்நாட்டில் உற்பத்தி செய்தால் மட்டுமே எனக் கூறினார் " என ஜூலை 23-ம் தேதி பிசினஸ்டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Links : 

Tesla seeks cut in import duty in India, says will boost demand

Import Duties in India Will Make Tesla Cars 'Unaffordable', Says Elon Musk
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை