YouTurn

ஸ்டாலின் தடை என தினமலர் செய்தி.. திமுகவினர் யாரும் "GoBackModi" சொல்லவில்லையா ?

ஸ்டாலின் தடை என தினமலர் செய்தி.. திமுகவினர் யாரும் "GoBackModi" சொல்லவில்லையா ?
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் "GoBackModi" என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இதற்கு எதிராக பாஜகவினரும் மோடியை வரவேற்கும் வகையில் வாழ்க மோடி, வெல்கம் மோடி என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவதுண்டு.

ஆனால், தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை தவிர்க்கும்படியும், அதற்கு தடையையும் விதித்து மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.



அதிலும், தலைப்பில் " மோடியை விமர்சிக்க ஸ்டாலின் தடை " என வைத்து விட்டு செய்தியின் உள்ளே ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது என உறுதித்தன்மை இல்லாமல் வெளியிட்டு உள்ளனர்.

ஆனால், தினமலர் நாளிதழ் செய்தியில் வெளியானது போல் இல்லாமல், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் "GoBackModi" என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். இன்றும் ட்விட்டர் உள்ளிடவையில் "GoBackModi" ட்ரெண்ட் ஆகி வருகிறது.



திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், "GoBackModi" என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு இருக்கிறார். அதை மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டி.ஆர்.பி.ராஜா ரீட்வீட் செய்து இருக்கிறார்.













திமுக ஆட்சியில் இருப்பதால் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பிரதமரை வரவேற்க சென்றுள்ளனர். இருப்பினும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் "GoBackModi" என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை