YouTurn

பாலியல் வன்கொடுமையை "கசமுசா" என வெளியிட்ட தினமலர் நாளிதழ்.. எழும் கண்டனங்கள் !

பாலியல் வன்கொடுமையை "கசமுசா" என வெளியிட்ட தினமலர் நாளிதழ்.. எழும் கண்டனங்கள் !
ஏப்ரல் 6-ம் தேதி தினமலர் நாளிதழ் வெளியிட்ட போஸ்டரில், 13 மாணவியரிடம் "கசமுசா", தலைமை ஆசிரியருக்கு "தூக்கு" என செய்தியை வெளியிட்டு இருந்தது. மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை "கசமுசா" எனும் வார்த்தையால் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதால் தினமலர் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.



Archive link 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா நகரில் உள்ள உறைவிட பள்ளி ஒன்றில் படிக்கும் பல மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெர்ரி விராவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி வீட்டிற்கு சென்ற போதே இந்த விசயம் வெளியே தெரிய வந்து போலீசார் விசாரித்து வந்தனர். பல மாணவியர்களை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு கடந்த ஆண்டே ஆயுள் தண்டனையை விதித்தது நீதிமன்றம். எனினும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.





குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தினமலர் நாளிதழில் "கசமுசா " எனக் குறிப்பிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை