YouTurn

எடிட் செய்து மாணவிகளின் நெற்றியில் "பொட்டு".. விமர்சனத்துக்குள்ளாகும் தினமலர் செய்தி படம் !

எடிட் செய்து மாணவிகளின் நெற்றியில் "பொட்டு".. விமர்சனத்துக்குள்ளாகும் தினமலர் செய்தி படம் !
மே 23-ம் தேதி " உயர்கல்வி ஆலோசனை தரும் 'தினமலர்' வழிகாட்டி இன்று துவக்கம்; 'டாப் லெவல்' நிபுணர்கள் பங்கேற்பு  " எனும் தலைப்பில் தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

உயர்கல்வி தொடர்பாக தினமலர் இணையதளத்தில் வெளியான செய்தியில் மாணவிகள் சிலர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அந்த படத்தில் உள்ள மாணவிகள் அனைவரின் நெற்றியிலும் ஒரே மாதிரியாக " பொட்டு " இடம்பெற்று இருக்கிறது.



Archive link 

தினமலர் பயன்படுத்திய படமானது, " 2018-ல் டெல்லியில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவிகள் செல்பி எடுத்துக் கொள்வதாக டெக்கான் ஹெரால்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இப்படத்தில் மாணவிகளின் நெற்றியில் பொட்டு இல்லை.

செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளில் இடம்பெறும் மாதிரி படங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் வெளியான புகைப்படத்தை பயன்படுத்திய தினமலர், அப்படத்தில் உள்ள மாணவிகளின் நெற்றியில் பொட்டு இருப்பது போன்று எடிட் செய்து பயன்படுத்தி உள்ளது.



தினமலர் செய்தியில், மாணவிகளின் நெற்றியில் பொட்டு வைத்து எடிட் செய்த படம் பயன்படுத்தி இருப்பது ட்விட்டர் தளத்தில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.



Twitter link 

ட்விட்டரில் தினமலருக்கு எழுந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, " இங்கு நிறைய சதிக் கோட்பாடுகள் உள்ளன. அது சிக்கலானது அல்ல. ஸ்டாக் போட்டோவில் இருக்கும் வடநாட்டுப் பெண்களை தமிழராக மாற்றும் முயற்சிதான் பொட்டு. எங்கள் திரைப்படங்களில் அதை எப்போதும் செய்கிறோம். எமி ஜாக்சனுக்கு கூட சேலையும், பொட்டும் கொடுத்து தமிழ்ப்பொண்ணு என சொல்லி அனுப்புகிறோம் " என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால், நடிகை கஸ்தூரியின் இந்த ட்வீட் பதிவும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை