YouTurn

டெல்லிக்கு மாசடைந்த காற்று பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்ற உ.பி அரசு வழக்கறிஞர் !

டெல்லிக்கு மாசடைந்த காற்று பாகிஸ்தானில் இருந்து வருகிறது என்ற உ.பி அரசு வழக்கறிஞர் !
இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று தரத்தில் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. மாசடைந்த காற்றால் டெல்லியில் வசிக்கும் மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. உலகின் காற்று மாசடைந்த நகரங்களில் டெல்லி இடம்பிடித்து இருக்கிறது.

இந்நிலையில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. காற்று மாசை குறைக்க 24 மணி நேரத்திற்குள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காற்று தர மேலாண்மை அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான, டெல்லி அரசு மற்றும் காற்று தர மேலாண்மை அமைப்பும் எடுத்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில், மாசடைந்த காற்று பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து வருவதாக உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர் கூறியது பேசுப் பொருளாக மாறி உள்ளது.

உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், " உ.பியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேசிய தலைநகரின் மாசுபாட்டில் எந்தப் பங்கும் இல்லை. மாசுபட்ட காற்று டெல்லியை நோக்கி செல்லவில்லை. பாகிஸ்தான் திசையில் இருந்து வரும் மாசுபட்ட காற்றே டெல்லியில் காற்றின் தரத்தைப் பாதிக்கிறது.

தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (CAQM) உள்ள காற்றின் தர மேலாண்மை ஆணையம் தொழிற்சாலைகளை 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கும் முடிவால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கரும்பு மற்றும் பால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, " அப்படியானால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும் என்கிறீர்களா ? " எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

2019-ம் ஆண்டு உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம். இரு அண்டை நாடுகளில் ஒன்றுதான் இந்தியாவிற்கு விஷ வாயுக்களை பரப்பியிருக்கலாம் " எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.

links :

Delhi Air Pollution case 

Pakistan may have released poisonous gas to pollute air in India, says UP BJP leader
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை