YouTurn

NEET அடுத்து CUET.. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் !

NEET அடுத்து CUET.. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் !
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் நடத்தப்பட்டு வருவது போல், இந்தியாவில் அனைத்து மத்தியப் பல்கலைக்கழங்களிலும் இளநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாட்டில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு கட்டாயமாக " Common university entrance test (CUET)" என அழைக்கப்படும் பொது நுழைவுத் தேர்வானது வரும் ஜூலை முதல் நடைபெறும் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் அறிவித்து உள்ளார்.


2022-2023 கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்கை நடைபெறும். இந்த பொது நுழைவுத் தேர்வானது ஹிந்தி,மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 13 மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்டையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். பொது நுழைவுத் தேர்வு என்பதால் 12 வகுப்பு மதிப்பெண்ணிற்கு எந்த பங்கும் தரப்படாது. மேலும், இந்த தேர்வானது சிபிஎஸ்இ பின்பற்றும் பாடத்திட்டமான என்சிஇஆர்டி பாடநூலை மையப்படுத்தியே இருக்கும்.


இதற்கு முன்பாக, 14 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு இருந்து வந்தன. ஆனால், தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்டையில் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.





மேலும், CUET நுழைவுத் தேர்வு முறையை மாநிலங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் கூட  ஏற்றுக் கொள்ளலாம் என யுஜிசி தெரிவித்து இருக்கிறது.



பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை