YouTurn

கோவாக்சினில் கன்றுக்குட்டியின் சீரம் இருக்கிறதா ?| அரசு மற்றும் பாரத் பயோடெக் விளக்கம் !

கோவாக்சினில் கன்றுக்குட்டியின் சீரம் இருக்கிறதா ?| அரசு மற்றும் பாரத் பயோடெக் விளக்கம் !
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக பரபரப்பான தகவல் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் பக்கத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


ஜூன் 15-ம் தேதி ஒன்றிய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அளித்த பதிலில், நிறுவனம் வழங்கிய தகவல்களின் படி, புதிதாக பிறந்த கன்றின் சீரம் வெரோ செல்களின் உயிர்ப்பு செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மொத்த தடுப்பூசி தயாரிப்பின் போது கொரோனா வைரஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது " எனக் கூறப்பட்டுள்ளது.




ஆனால், கோவாக்சின் தயாரிப்பின் போதே புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாகவும், இறுதியாக பயன்பாட்டிற்கு வரும் போது தடுப்பூசியில் கன்றுவின் சீரம் இருக்காது என சுகாதாரத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.




Facebook link

சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், " புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் வெரோ செல்களின் உருவாக்கம்/ வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான பொவின் மற்றும் பிற விலங்கு சீரம் ஆகியவை உலக அளவில் வெரோ செல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நிலையான செறிவூட்டல் மூலப்பொருள். வெரோ செல்கள் ஆனது தடுப்பூசிகளின் உற்பத்திக்கு உதவுகின்ற உயிரணுக்களை நிறுவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதே தொழில்நுட்பம் போலியோ, ரேபீஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளில் பல சதாப்தங்களாக பயன்படுத்தப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த பிறகு வெரோ செல்கள் நீர் மற்றும் வேதிப் பொருட்களால் சுத்திகரிக்கப்பட்டு அதிலுள்ள கன்றுக்குட்டியின் சீரம் நீக்கப்படுகிறது. பின்னர் அந்த செல்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு ஏற்படுகிறது. வைரஸ் வளரும் போது வெரோ செல்கள் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. அதன்பின்னர், அந்த வைரசும் கொல்லப்பட்டு மற்றும் சுத்திகரிக்கப்படும். செயலற்ற வைரசில் இருந்து தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

தடுப்பூசி தயாரிப்பு முழுமை அடையும் போது கன்றுக்குட்டியின் சீரம் இருக்காது. தடுப்பூசியின் இறுதி தயாரிப்பில் கன்றுவின் சீரம் பயன்படுத்தப்படுவதில்லை " என விளக்கி உள்ளனர்.



கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் பாரத் பயோடெக், " கன்றுக் குட்டியின் சீரம் செல்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், SARS CoV2 வைரசின் வளர்ச்சியிலோ அல்லது இறுதி வடிவமைப்பிலோ பயன்படுத்தப்படவில்லை " எனக் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
அரசு மற்றும் நிறுவனத்தின் விளக்கத்தின்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பில் வெரோ செல்களை உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வைரஸ் வளர்ச்சியிலோ அல்லது தடுப்பூசியின் இறுதிக் கட்டத்திலோ கன்றுவின் சீரம் இருப்பதில்லை. அதற்கு முந்தைய செயல்முறைகளிலேயே அவை நீக்கப்படுகிறது என அறிய முடிகிறது. இதை தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.


Links : 









பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை