YouTurn

கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலுக்கு கியூபா காட்டிய மனிதநேயம் !

நோவல் கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றால் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விமான சேவைகளும் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, தனது சொந்த நாட்டு மக்களையே அழைத்து வர பல நாடுகள் தயக்கம் காட்டி வருகிற நிலை உள்ளது. இந்நிலையில், கியூபா எனும் தேசம் கொரோனா தாக்கிய...

கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலுக்கு கியூபா காட்டிய மனிதநேயம் !
நோவல் கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றால் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விமான சேவைகளும் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, தனது சொந்த நாட்டு மக்களையே அழைத்து வர பல நாடுகள் தயக்கம் காட்டி வருகிற நிலை உள்ளது. இந்நிலையில், கியூபா எனும் தேசம் கொரோனா தாக்கிய மக்களுக்கு மனித நேயத்துடன் உதவ முன்வந்த செயல் உலக அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற கப்பல் 600-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், 300-க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் உடன் கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்த பெரும்பாலானவர்கள் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள். அப்போழுது, கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக கப்பலை அருகில் உள்ள துறைமுகத்தில் நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் உதவி கேட்கப்பட்டது. எனினும், அந்த நாடும் யாவும் அனுமதி தர மறுத்து விட்டன.



இதையடுத்து, பிரிட்டன் அரசின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் அமெரிக்க மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறு உதவி கேட்கப்பட்டது. அமெரிக்க மண்ணில் கப்பலை அனுமதிக்க அமெரிக்க அதிகாரிகளை அணுகினர். ஆனால் அந்த முயற்சி தடைகளை சந்தித்தது. மாறாக கியூபா அதிகாரிகள் பிரிட்டனின் கோரிக்கையை ஏற்று ப்ரீமர் கப்பலை தங்கள் தேசத்தில் நிறுத்த அனுமதி அளித்தனர்.

கியூபாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை எம்.எஸ்.ப்ரீமர் கப்பல் அதிகரித்து விடும் என்ற அச்சமோ, சுயநலமோ இல்லாமல் கப்பலை நிறுத்த அனுமதி அளித்தது கியூபா.



கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவின் துறைமுகத்தில் ப்ரீமர் கப்பல் நிறுத்தப்பட்டு கப்பலில் இருந்த சுற்றுலாப் பணிகள் கொரோனா வைரஸ் சோதனைக்கு பிறகு கியூபாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 52 பேருக்கு அறிகுறிகள் உள்ளதாகவும் இண்டிபென்டென்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும். வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் நான்கு விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தனர்.

" கப்பலில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் நலனையும், உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவாலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்பதை கருத்தில்கொண்டு கியூபா இந்த முடிவை எடுத்துள்ளதாக கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ".

கியூபா சுகாதார வழங்குநர்கள் உலகளாவிய அவசரநிலைக்கு ஆதரவளிப்பது இது முதல் முறை அல்ல. எபோலா நெருக்கடியின் போது கியூபா மருத்துவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் செய்த உதவிகளால் பாராட்டப்பட்டனர். 2010-ல் ஹைட்டியாவின் பூகம்பத்திற்கு கியூபா அளித்த பதிலால் மற்ற நாடுகள் " வெட்கப்படும் " நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Proof links : 

Coronavirus-hit cruise ship docks in Cuba for passengers to evacuate

What coronavirus revealed about national mindsets across the world — and how Cuba came out on top
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை