YouTurn

2025-ல் பரவிய பொய் செய்திகளின் இரண்டாவது தொகுப்பு!

2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

2025-ல் பரவிய பொய் செய்திகளின் இரண்டாவது தொகுப்பு!

2025 ஆம் ஆண்டில் முக்கியமாக திருப்பரங்குன்றம் சர்ச்சை, கரூர் கூட்டல் நெரிசல் சம்பவம், வக்பூ வாரியம், பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொய் செய்திகள் மட்டுமல்லாது, ஊடகங்கள் வெளியிட்டுள்ள பொய் செய்திகள், டிஜிட்டல் மோசடிகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை இங்கு வரிசையாக தொகுத்துள்ளோம்.


இங்கே தொகுக்கப்பட்டிருப்பது வெறும் பட்டியல் மட்டும் அல்ல. எந்த வகையான பொய் செய்திகள் அதிகமாக பரப்பப்பட்டுள்ளன, அவை எத்தகைய நோக்கங்களுக்கானவை என்பது உட்பட பல சமூக விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியிலேயே இவை தொகுக்கப்பட்டுள்ளன.


பஹல்காம் தாக்குதல்:

 

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மே 7ஆம் தேதியன்று ‘Operation Sindoor’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா.

 

இது குறித்து செய்திகளை வெளியிட்ட செய்தி ஊடகங்கள் (குறிப்பாக காட்சி ஊடகங்கள்) இணையத்தில் பழைய வீடியோக்களையும் யூட்யூப் தளத்தில் உள்ள Gaming Video-களையும் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டதை  ‘You Turn’ அம்பலப்படுத்தியது.

 

இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள்!

 

பழைய வீடியோக்களை தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது.

 

யூடியூப் தளத்தில் இருந்த பழைய வீடியோவை பதிவிட்டு, கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படை தாக்கியதாகவும், பிற நாடுகளில் நடந்த தாக்குதல்களின் போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாஜக ஆதரவாளர்கள் தவறான தகவல்களை பரப்பினார். இதனை  ‘You Turn’ ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது.

 

பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 

கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படையால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 

”நான் ஒரு முஸ்லிம், பாகிஸ்தானி அல்ல. நான் ஒரு முஸ்லிம், தீவிரவாதி அல்ல. இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்” கர்னல் சோபியா குரேஷி கூறியதாக மத பிளவாதத்தை தூண்டும் வகையில் பரப்பினார்கள்.

 

ஆனால், இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake வீடியோ என்பதை அம்பலப்படுத்தினோம்.

 

‘தான் ஒரு முஸ்லிம்’ என்று சோபியா குரேஷி பேசுவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 

பிரபல தாதாவையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்து தெருக்களில் அழைத்துச் செல்லும் வீடியோவை "பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட நபர்கள்" என்று ’தந்தி டிவி’ பொய்யான செய்தியை வெளியிட்டது.

 

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் இருந்து வந்த நிலையில் இவ்வாறான செய்தியை  ’தந்தி டிவி’ வெளியிட்டதை அம்பலப்படுத்தினோம்.

 

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

 

டிஜிட்டல் மோசடிகள்:


இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ள அதே நேரத்தில், அதையே பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கவர்ச்சிகரமான சலுகைகளுடன் போலி இணையதளங்களை உருவாக்கி நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் தற்போது பொதுமக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.


அந்த வரிசையில் இந்த ஆண்டும் போத்தீஸில் கிறிஸ்துமஸ் பரிசுத் திட்டம், சரவணா ஸ்டோர்ஸின் பரிசு திட்டம், DMART வழங்கும் கிறிஸ்துமஸ் பரிசு எனக் கூறி போலி இணையதளப் பக்கங்களின் பெயரில் பல மோசடிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டன. அவற்றை 'Youturn' ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ.50,000 வரை பரிசுத்தொகை கொடுக்கிறதா ‘போதீஸ்’ ?


சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!


சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசுத்தொகை எனக் கூறி போலி இணையதளம் பரவியது. பரவி வரும் இணையதளப் பக்கத்தை “Scam Detector” இணையத்தளம் மூலம் ஆய்வு செய்ததன் மூலம், “மிகவும் ஆபத்தான இணையதளம் இது” என்பதை அம்பலப்படுத்தினோம்.


சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசுத்தொகை என்று போலியாக பரவும் செய்தி!


மேலும் வங்கிகளின் பெயரிலும், அரசுத் திட்டங்களின் பெயரிலும் கூட பல ஆன்லைன் மோசடிகள் வாட்சாப் ஊடகங்களில் APK File-களாக அனுப்பப்பட்டு பரப்பப்பட்டன. குறிப்பாக "பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" மூலம் புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி என்று குறிப்பிட்டு அரசு அறிவிக்காத திட்டங்களின் பெயரிலும் போலி செய்திகள் பரப்பப்பட்டன. அவற்றையும் அம்பலப்படுத்தியுள்ளோம்.


வங்கிகளின் பெயரில் தனிப்பட்ட தரவுகளை கேட்டு அனுப்பப்படும் APK File-கள் மோசடியானது! எச்சரிக்கை!


ஆண்கள் அனைவருக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுமா? உண்மை என்ன?


"பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம்" - புதிய ஏசி வாங்கினால் ரூ.7000 வரை தள்ளுபடி எனப் பரவும் போலி செய்தி!


சீமான் பரப்பிய பொய் செய்திகள்:


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல பொய் செய்திகளை ஊடகங்களிலும், கட்சி மாநாடுகளிலும் தொடர்ந்து பரப்பினார். அவற்றை 'Youturn' ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.


“மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளில் உள்ள மாடு என்பதன் பொருள் செல்வம். அதாவது கல்வியைத் தவிர பொன், பொருள் போன்ற செல்வங்கள் எல்லாம் சிறந்தவையே அல்ல என்று திருவள்ளுவர் கூறியதை, “கல்வி தான் மானுடர்க்குச் செல்வம். ஆனால் ஆடும் மாடும் நம் செல்வங்கள்” என்று திருவள்ளுவர் இந்த குறளில் கூறியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான செய்திகளை பரப்பினார்.


“மாடல்ல மற்றை யவை” என்பதன் பொருள் தெரியாமல் வள்ளுவரின் திருக்குறளை தவறாகப் பரப்பும் சீமான்!


இதே போன்று, சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் பூமியிலுள்ள வளி மண்டலத்தில் பட்டு சிதறுவதால் தான் வானமும் கடலும் நீல நிறமாக இருக்கிறது என்றும், ஓசோன் படலம் என்பது பூமியில் உள்ள காடுகள் மற்றும் கடலில் உள்ள நீலப் பச்சை பாசிகளால் தான் உருவாகிறது என்றும் அறிவியல்பூர்வமாக உண்மையல்லாத, தவறான கருத்துக்களை சீமான் மரங்களின் மாநாட்டில் பேசினார். அவற்றை அப்போதே 'தவறான செய்திகள்" என்று அம்பலப்படுத்தினோம்.


மரங்கள் மாநாட்டில் சீமான் பேசியது அறிவியல்பூர்வமானதா? அவியலா?


சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக காமராஜர் ஆட்சிக்கு வந்தநாள் ஏப்ரல் 14, 1954. அதே சமயம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டில். அவர் 1939-ல் தன்னுடைய எட்டு வயதில் ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பை படித்துள்ளார். காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது அப்துல்கலாமுக்கு வயது 22. இந்நிலையில் காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் படித்தவர் தான் அப்துல்கலாம் என்று சீமான் பொய் செய்தியை ஊடகங்களில் பரப்பினார். அது குறித்தும் நாம் செய்தி வெளியிட்டுள்ளோம்.


காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் தான் அப்துல்கலாம் படித்ததாக பொய் செய்தி பரப்பும் சீமான்!


இதே போன்று, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை எனக் கூறி தவறான செய்தியை முன்வைத்தார் சீமான். அதை "Youturn" அம்பலப்படுத்தியுள்ளது.


ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.. சீமான் பரப்பும் பொய்!


இதே போன்று காமராஜர் இறந்ததற்கு அண்ணாதுரை அழுததாக சீமான் கூறியதும் தவறான தகவலே.


காமராஜர் இறந்ததற்கு அண்ணாதுரை அழுததாக சீமான் சொல்வது தவறான தகவல்!


இது தவிர அவர் பரப்பிய மற்ற செய்திகள் குறித்து "Youturn" அம்பலப்படுத்தியதையும் கீழே வரிசையாக இணைத்துள்ளோம்.


டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் சீமான்!


ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாதர் சங்கம் போராடவில்லையா? சீமான் சொல்லும் பொய்!


உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நிதியுதவியும் செய்யவில்லையா? சீமான் கூறிய உருட்டுகள்!


வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாட்டு MP-கள் 17 பேர் வாக்களிக்கவில்லை? சீமான் சொல்வது உண்மையா?


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை