YouTurn

2025-ல் பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு-1!

2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகள் இங்கு வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளன.

2025-ல் பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு-1!

'2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு' என்று இங்கே தொகுக்கப்பட்டிருப்பது வெறும் பட்டியல் மட்டும் அல்ல. எந்த வகையான பொய் செய்திகள் அதிகமாக பரப்பப்பட்டன, அவை எத்தகைய நோக்கங்களுக்கானவை என்பது உட்பட பல சமூக விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியே இது.


2025 ஆம் ஆண்டில் முக்கியமாக திருப்பரங்குன்றம் சர்ச்சை, கரூர் கூட்டல் நெரிசல் சம்பவம், வக்பூ வாரியம், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு பொய் செய்திகள் பரவின. அவற்றை இங்கு வரிசையாக தொகுத்துள்ளோம்.


திருப்பரங்குன்றம் சர்ச்சை:

 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சை செய்து வருகின்றனர். மலையில் இருக்கும் இந்த கல்தூண் தான், தீபத்தூண் என்று பரப்பப்பட்டது.

 

ஆனால் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத் தூணில் தீபம் ஏற்றுவது தான் மரபு வழக்கம் என்பதை ‘You Turn’ ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது.

 

சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத் தூண் என்று பரப்பப்படும் பொய்!

 

மேலும் ’திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் ஸ்தல விருட்சம் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது. அதில்  முஸ்லிம்கள் கொடியேற்றுகிறார்கள்’ என்று எச்.ராஜா பேட்டியளித்தார். முருகன் கோவிலின் ஸ்தல விருட்சம் மலையில் இல்லை. வசந்த மண்டபத்தின் அருகில் தான் உள்ளது என்று அம்பலப்படுத்தினோம். ரிப்பளிக் டிவி ’தீபத்தூணில் தீபம்  ஏற்றுவது பிரச்சனையில்லை என்று தர்கா செயலாளர் சொன்னதாக’ பரப்பியது.  தர்கா செயலாளர் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை என்று ‘You Turn’ அம்பலப்படுத்தினோம்.

 

திருப்பரங்குன்றம் வழக்கு: பொய்களை பரப்பும் ரிப்பளிக் டிவி!

 

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலமரத்தில் முஸ்லிம்கள் கொடி ஏற்றுவதாக பரப்பப்படும் பொய்!

 

பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை அங்கீகரிக்கிறதா?

 

மேலும் திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்தும் அதன் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் பங்குகள் குறித்தும் அம்பலப்படுத்தி விரிவான கட்டுரைகளையும் எழுதியுள்ளோம்.

 

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உண்மைகளும் பொய்களும்!

 

திருப்பரங்குன்றம் கல்தூணும் சிக்கந்தர் தர்காவும்! வரலாறு என்ன சொல்கிறது?

 

திருப்பறங்குன்றம் சர்ச்சை: அதன் பின்னணியில் இருப்பது இந்து முன்னணி!

 

கரூர் சம்பவம்:

 

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமூக வலைத்தளங்கள் பல்வேறு வதந்திகளும் பொய்களும் பரப்பப்பட்டன.

 

தவெகவின் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல் சரியான உபகரணங்கள் இல்லாத கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக’ பரப்பினார். கரூரில் உள்ள அக்‌ஷயா, அப்பலோ, அமராவதி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என்ற உண்மையைக் கொண்டு ஆதவ் அர்ஜுனாவின் பொய்யை  ‘You Turn’ அம்பலப்படுத்தியது.

 

https://youturn.in/factcheck/stampede-affected-people-are-not-admitted-in-near-by-private-hospitals.html

 

கரூர் சம்பவத்தின் போது விஜய் கூட்டம் நடக்கவிருந்த இடத்திற்கு பகல் 12 மணிக்கு வருவார் என்று தவெகவின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை என்று ரெட் பிக்ஸ் யூடியூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் பரப்பிய பொய்யை, தவெகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கொண்டே நிரூபித்து முறியடித்தோம்.

 

https://youturn.in/factcheck/felix-gerald-blatantly-lying-about-karur-stampede.html

 

'கரூர் சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரின் உடலும் ஒரு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை முடித்து காலை 6 மணிக்குள் அனைத்து உடல்களை எரித்து விட்டார்கள்’  என்று சவுக்கு சங்கர் சொன்னதை அதிகாரப்பூர்வ செய்திகளை ஆதாரமாக கொண்டு அது பொய்யான தகவல் என்பதை வெளிப்படுத்தினோம்.

 

https://youturn.in/factcheck/false-news-spread-by-savukku-sankar-about-karur-stampede-.html

 

கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து பேசியதை செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டிலும் சமூக வலைத்தளத்திலும் திரித்து தவறாக பரப்பியதை அம்பலப்படுத்தினோம்.

 

https://youturn.in/factcheck/cm-notes-on-assembly-about-karur-tragedy.html

 

வக்பு வாரியம்:

 

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ’வக்ஃப் (திருத்த) மசோதா-2025’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முஸ்லீம்களுக்கு விரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் இந்த சட்டத்திருத்தம் இருப்பதாக இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.

 

’இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் வக்ஃப் சொத்துகள் இருப்பதாக’ பாஜகவை சேர்ந்த ;சங்கி பிரின்ஸ்; என்பவரால் பரப்பப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட பல மடங்கு அதிக வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து பாஜகவின் பொய்யை ‘You Turn’ அம்பலப்படுத்தியது.


தமிழ்நாட்டில் தான் அதிகமான வக்ஃப் சொத்துகள் இருக்கிறது என்று பரப்பப்படும் தவறான தகவல்!

 

‘துருக்கி, லிபியா, எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட வக்ஃப் வாரியம் இல்லை என்று பாஜக எம்.பி நாடாளுமன்றத்திலே பேசினார். அவர் குறிப்பிட்ட 9 நாடுகளிலும் வக்ஃப் வாரியம் இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அவர் கூறியது பொய் என்பதை அம்பலப்படுத்தினோம்.


’இஸ்லாமிய நாடுகளில் கூட வக்ஃப் வாரியம் இல்லை’ - பாஜக MP பேச்சு! உண்மை என்ன?

 

’வக்ஃப் (திருத்த) மசோதா-2025’ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சார்பில் இருந்தும் 22 உறுப்பினர்கள் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தாக சீமான் பரப்பினார். நாடாளுமன்றத்தில் 22 திமுக உறுப்பினர்கள் உள்ளனர், மீதம் உள்ளவர்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை விளக்கி சீமான் சொன்ன தவறான கருத்தை அம்பலப்படுத்தினோம்.


வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாட்டு MP-கள் 17 பேர் வாக்களிக்கவில்லை? சீமான் சொல்வது உண்மையா?

 

பழைய வக்ஃப் சட்டத்தின் படி  வக்ஃப் வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் சொல்லமுடியாது. தற்போதைய திருத்தம் இந்த நிலையை மாற்றி வக்ஃப் வாரிய சொத்து தொடர்பான சர்ச்சையின் போது நீதிமன்றத்தை அணுகமுடியும் என்று கொண்டிருப்பதாக மோடி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டது. 

 

பழைய வக்ஃப் சட்டத்திலே ‘வக்ஃப் தீர்ப்பாயத்தில்’ முறையீடு செய்யவும், சிறப்பான சூழ்நிலைகளில் இந்தத் தீர்ப்பாயத்தின் இறுதி முடிவையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வழிமுறை உள்ளதை எடுத்துக்காட்டி மோடி ஆதரவாளர்களால் பரப்பப்படும் பொய்யை அம்பலப்படுத்தினோம்.

 

ரங்கராஜ் பாண்டே மற்றும் தமிழ் ஜனம்:

 

2025 அக்டோபர் மாதம் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக  ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த செய்தியை வெளியிடும் போது, நீயூஸ் கார்ட்டில் Fact Check ஊடகவியலாளர் முகமது ஜூபைர்-ன் புகைப்படத்தை ‘தமிழ் ஜனம்' ஊடகம் தவறாக வெளியிட்டிருந்ததை ’You Turn’ அம்பலப்படுத்தியது.

 

ஜூபைர் ஹங்கர்கேகர் புகைப்படத்திற்கு பதிலாக முகமது ஜூபைர் படத்தை தவறாக வெளியிட்ட ‘தமிழ் ஜனம்'!

 

அதேபோல், ஒரு அரசு தனக்கு கிடைத்த வருவாயை விட குறைவாக செலவு செய்திருக்கிறது என்பதைக் குறிக்கும் உபரி வருவாயில் (revenue surplus) உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பதை திரித்து, உத்தர பிரதேசம் அதிக வருவாய் (revenue) ஈட்டும் மாநிலமாக இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டது ’தமிழ் ஜனம்' ஊடகம். அதேபோல் தமிழ்நாடு ‘வருவாய் பற்றாக்குறை’யில் முன்னிலையில் இருப்பதை ’நிதிப்பற்றாக்குறை’யில் இருப்பதாக திரித்து கூறுயது ’தமிழ் ஜனம்' ஊடகம்.

 

உபரி வருவாயை ’வருவாய்’ என்றும், வருவாய் பற்றாக்குறையை ’நிதிப்பற்றாக்குறை’ என்றும் குழப்பிக்கொண்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ள ’தமிழ் ஜனம்’ ஊடகத்தை அம்பலப்படுத்தினோம்.

 

அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் உ.பி முதலிடமா? ‘தமிழ் ஜனம்’ வெளியிட்ட தவறான செய்தி!

 

அன்புமணி ராமதாஸ் வாஜ்பாயி தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே தவறான தகவலை கூறினார்.

 

ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் தான் 2004 - 2009 அன்புமணி ராமதாஸ்  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் என்ற உண்மையை ’You Turn’-ல் அம்பலப்படுத்தினோம்.

 

வாஜ்பாயி ஆட்சியில் அன்புமணி அமைச்சராக இருந்ததாக ரங்கராஜ் பாண்டே சொல்லும் தவறான தகவல்!

 

ஏற்றுமதி இறக்குமதி கட்டணங்கள் (Tariffs) விஷயத்தில் அமெரிக்க அரசு கனடா, பனாமா போன்ற மற்ற நாடுகளைக் கடுமையாக அணுகுகிறது. ஆனால் இந்தியாவிடம் அது பற்றி விவாதிப்போம் என்று மிகத் தன்மையாக மரியாதையாக அணுகுகிறது. இது உலகளாவிய அளவில் இந்தியாவின் மரியாதை உச்சத்தைத் தொட்டிருப்பதைக் காட்டுகிறது’ என்று  ரங்கராஜ் பாண்டே கூறிவந்தார்.

 

ஆனால், பிரதமர் மோடி அமெரிக்காவில் டிரம்பை சந்தித்துவிட்டு வந்த சில நாட்களிலே இந்தியா மீது பரஸ்பர வணிகக் கட்டணங்களை (Reciprocal Tariffs) விதிப்பது பற்றிய அறிவிப்பை அதிபர் டிரம்ப் மீண்டும் வெளியிட்டார் என்ற உண்மை செய்தியை எடுத்துக் கூறி ரங்கராஜ் பாண்டே சொன்ன பொய்யை அம்பலப்படுத்தினோம்.

 

மோடியின் செல்வாக்கு காரணமாக அமெரிக்கா இந்தியாவை விதிவிலக்காக அணுகுகிறது - ரங்கராஜ் பாண்டே! உண்மை என்ன?

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை