YouTurn

கோவையில் கோவில் வாசலில் இறைச்சியை வீசி சென்ற நபர் கைது !

மே 29-ம் தேதி காலை கோவையின் வைசியாள் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் வாசலில் மர்ம நபர் இறைச்சியை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் அருகே உள்ள ராகவேந்திரா சுவாமிகள் கோவிலிலும் இறைச்சி பையை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. Meat thrown in front...

கோவையில் கோவில் வாசலில் இறைச்சியை வீசி சென்ற நபர் கைது !
மே 29-ம் தேதி காலை கோவையின் வைசியாள் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் வாசலில் மர்ம நபர் இறைச்சியை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் அருகே உள்ள ராகவேந்திரா சுவாமிகள் கோவிலிலும் இறைச்சி பையை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கோயம்புத்தூர் கோவில் நுழைவாயின் முன்புறம் இறைச்சியை வீசிச் சென்றதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த ட்வீட் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது. இந்த புகைப்படம் மதம் சார்ந்த வன்முறையை தூண்டும் விதத்தில் பரப்பப்பட்டு வருகிறது.



Facebook link | archive link



Twitter link | archive link 

கோவில்களின் நுழைவாயிலில் இறைச்சியை வீசி சென்ற ஹரி என்ற நபரை கைது செய்து, வழக்கு பதியப்பட்டு உள்ளதாக கோயம்புத்தூர் மாநகர போலீஸ் ட்விட்டரில் இந்து மக்கள் கட்சிக்கு பதில் அளித்துள்ளனர். காவல்துறைக்கு நன்றி தெரிவித்து இந்து மக்கள் கட்சியும் அதை பகிர்ந்து உள்ளனர்.



Twitter link | archive link 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் மூலம் இறைச்சியை வீசி சென்ற ஹரி ராம்பிரகாஷ் (48) என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான ஹரி வேலை இல்லாமல் உள்ளார். கவுண்டம்பாளையத்தில் 1 கிலோ பன்றி இறைச்சியை வாங்கி வந்து கோவிலில் வீசியுள்ளார். அவர் வீட்டிற்கு அருகே உள்ளவர்களிடம் பிரச்சனை செய்வதாகவும் கூறப்படுகிறது. அவர் எதற்காக கோவில் முன்பு இறைச்சியை வீசிச் சென்றார் என காவல்துறை தரப்பில் கூறப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கோவில்கள் மற்றும் மசூதிகளின் வாசலில் பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி உள்ளிட்டவையை வீசி செல்லும் சம்பவங்கள் பலவற்றை பார்த்திருப்போம். ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் மத அடிப்படைவாதிகள் செய்யும் தவறான காரியத்தால் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே வெறுப்புணர்வு மூழ்கிறது.

Links : 

Man arrested for placing meat in front of Coimbatore temples
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை