YouTurn

அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்ததாக பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

பார்ப்பன மரபுகள் எப்படி அனைவரையும் அடிமைப்படுத்துகிறது என்பதை அம்பேத்கர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். `இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்கிற அவரது நூலின் மூலம், எப்படி பார்ப்பனிய நூல்களும் பழக்கவழக்கங்களும் பாலின பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன என்பதையும் காட்டமாக முன்வைத்தவர் இவர். இந்நிலையில் அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்ததாக பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

சமூக பாகுபாட்டை ஒழிக்கவும், சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையை வழங்கவும் அயராது உழைத்தவர் அம்பேத்கர். பார்ப்பன மரபுகள் எப்படி அனைவரையும் அடிமைப்படுத்துகிறது என்பதை அம்பேத்கர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். `இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்கிற அவரது நூலின் மூலம், எப்படி பார்ப்பனிய நூல்களும் பழக்கவழக்கங்களும் பாலின பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன என்பதையும் காட்டமாக முன்வைத்தவர் இவர். 


இந்நிலையில் “அம்பேத்கருக்கு உணவு, ஆரம்ப, மற்றும் நடுநிலை கல்வியுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து கொடுத்த மகாதேவ் அம்பேத்கர் ஒரு பிராமணர். அம்பேத்கருக்கு உயர்நிலை கல்வி கொடுத்து, கல்லூரி படிப்புக்கான உதவி பெற பரோடா மன்னரிடம் பரிந்துரை செய்த கிருஷ்ணாஜி கெலுஸ்கர் ஒரு பிராமணர். அம்பேத்கரை மும்பை எல்பின்ஸ்டனில் கல்லூரி படிப்பும், லண்டன் மற்றும் கொலம்பியன் பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பும் படிக்க வைத்து, தன்னுடைய ராணுவ செயலாளர் ஆக்கிய பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் ஒரு பிராமணர். அம்பேத்கரை மணந்து அவருக்கு சேவை செய்த டாக்டர் சவிதாவும் ஒரு பிராமணர்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இதே பதிவு கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிகிறது. 


கூற்று 1: அம்பேத்கருக்கு உணவு, ஆரம்ப, மற்றும் நடுநிலை கல்வியுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து கொடுத்த மகாதேவ் அம்பேத்கர் ஒரு பிராமணர்


டாக்டர் அம்பேத்கர் 10 வயதை அடைவதற்கு முன்பே தனது தாயை இழந்துவிட்டார். மஹர் சமூகத்தைச் சேர்ந்த அவர்களை பம்பாய் மாகாணத்தில் உள்ளவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தினர். அவர்களின் குடும்பம் முதலில் பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் தபோலி தாலுகாவில் வசித்தது.


டாக்டர் அம்பேத்கரின் தந்தையே அவரது குழந்தைப் பருவம் முழுவதிலும் உண்மையான பாதுகாவலராக இருந்தார். மேலும் இடையில் பணி காரணமாக அம்பேத்கரின் தந்தை வெளியூருக்கு இடம்பெயர்ந்தபோது, அம்பேத்கரின் அத்தை மற்றும் சில அண்டை வீட்டாரின் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளார் என்பதை 'விசாவுக்காகக் காத்திருக்கிறேன்' என்ற அவரின் சுயசரிதை புத்தகத்தில் இருந்து அறிய முடிந்தது. எனவே அண்டை வீட்டார் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவரது சுய சரிதையில் எங்கும் அவ்வாறு குறிப்பிடப்படவும் இல்லை. 



மேலும் 2019 ஆம் ஆண்டு ஏபிபி மஜாவின் ஒரு நிகழ்ச்சியில், டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர், பிராமண ஆசிரியர் உண்மையில் டாக்டர் அம்பேத்கருக்கு குடும்பப்பெயரை வைத்தாரா என்ற கேள்விக்கு, "அது உண்மை" என்று கூறியுள்ளார்.



மேலும், "அவரது ஆசிரியர் மகாதேவ், அம்பேத்கரை மிகவும் நேசித்ததால், ஆசிரியர் பீம்ராவ் ராம்ஜியின் குடும்பப்பெயரை அம்பேத்கர் என்று மாற்றினார்" என்பதையும் செய்தியின் மூலம் அறிய முடிகிறது. அதே சமயம் டாக்டர் அம்பேத்கரின் மற்றொரு உறவினரான ராஜ்ரத்னா அம்பேத்கர், ஆல்ட் நியூஸ்க்கு அளித்த பேட்டியில், ஒரு பிராமண ஆசிரியர் டாக்டர் அம்பேத்கரின் குடும்பப் பெயரை மாற்றியதாக கூறும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

கூற்று 2: அம்பேத்கருக்கு உயர்நிலை கல்வி கொடுத்து, கல்லூரி படிப்புக்கான உதவி பெற பரோடா மன்னரிடம் பரிந்துரை செய்த கிருஷ்ணாஜி கெலுஸ்கர் ஒரு பிராமணர். 


டாக்டர் அம்பேத்கரின் ஆசிரியரான கிருஷ்ணாஜி கெலுஸ்கர் குறித்து ஆய்வு செய்ததில், அவர் தான் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாற்றை அம்பேத்கருக்கு பரிசளித்ததற்காக குறிப்பாக அறியப்படுகிறார் என்பதை அறிய முடிந்தது. மேலும் அவர் பிராமணர் என்பதற்கான குறிப்புகளும் சில கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. 



கூற்று 3: அம்பேத்கரை மும்பை எல்பின்ஸ்டனில் கல்லூரி படிப்பும், லண்டன் மற்றும் கொலம்பியன் பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பும் படிக்க வைத்து, தன்னுடைய ராணுவ செயலாளர் ஆக்கிக்கொண்ட பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் ஒரு பிராமணர். 


பரோடாவின் மகாராஜா - மராட்டிய ஆட்சியாளரான மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் அம்பேத்கரின் மேற்படிப்புக்கு நிதியளித்தார். மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் 1875 முதல் 1939 வரை பரோடா மாநிலத்தின் மகாராஜாவாக இருந்தார். அவர் மந்திரி என்று பொருள்படும் மாத்ரே என்ற மராட்டிய குலத்தைச் சேர்ந்தவர் என்பதை செய்தியின் மூலம் அறிய முடிகிறது



கூற்று 4: அம்பேத்கரை மணந்து அவருக்கு சேவை செய்த டாக்டர் சவிதாவும் ஒரு பிராமணர்


டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாளில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி ரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் சாரதா கபீரை மணந்தார்.



சமூக சீர்த்திருத்தவாதியான இவர் ஒரு பிராமணர். திருமணத்திற்கு பின்பு இவர் புத்த மதத்திற்கு மாறியதோடு, தனது பெயரை சவிதா அம்பேத்கர் என்றும் மாற்றிக் கொண்டார். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை