சென்னைக்கு வந்தது நாய் இல்லை ஆடு : ஆய்வில் தகவல்
நவம்பர் 17-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 2100 கிலோ கறியானது நாய்க்கறி என்ற பரபரப்பு இருந்து வந்தது. அவை நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா என சோதனை செய்ய சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. நேற்றுவரை அதன் டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வெளியாகாத நிலையில் இன்று...

நவம்பர் 17-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 2100 கிலோ கறியானது நாய்க்கறி என்ற பரபரப்பு இருந்து வந்தது. அவை நாய்க்கறியா அல்லது ஆட்டுக்கறியா என சோதனை செய்ய சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.
நேற்றுவரை அதன் டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வெளியாகாத நிலையில் இன்று 22-ம் தேதி அதற்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளனர். அதில், சென்னைக்கு வந்த 2100 கிலோ கறி நாய்க்கறி அல்ல ஆட்டுக்கறியே என உறுதி செய்துள்ளனர்.

சோதனையிட்டப் போதே ஆட்டுக்கறியானது அழுகிய நிலையில் வந்தடைந்தது. தலைப் பகுதி இல்லாமல், வால் நீளம், வாலில் முடி இல்லை, உடல் நாய் போன்று உள்ளது என்ற பல காரணங்களால் நாய்க்கறியானது ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னை ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து செய்தி, மீம்கள் வந்தன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. இனி அசைவப் பிரியர்கள் ஹோட்டல்களில் கறி உணவுகளை சாப்பிட அச்சம் கொள்ள தேவையில்லை.
எனினும், அழுகிய நிலையில் கறி இருந்ததற்கு, சரக்கில் “ MEAT “ என்பதற்கு பதிலாக “ Fish “ எனக் குறிப்பிட்டதற்கு, இதனை அனுப்பியது யார் என்று தொடர்பாக விசாரணைகள் நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன கறிகள் வாங்கப்படுகிறதா ? ஹோட்டல்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஒரு வழியாக டி.என்.ஏ முடிவின் மூலம் சென்னை வந்தது நாய்க்கறி இல்லை, ஆட்டுக்கறி தான் என முடிவாகி விட்டது.
ஆட்டுக்கறிதான்; நாய்க்கறி அல்ல! கால்நடை மருத்துவ கல்லூரி ஆய்வில் உறுதி