YouTurn

சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் சிலுவை வடிவ லோகோவா ?| மாநகராட்சியின் பதில் !

சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் சிலுவை வடிவ லோகோவா ?| மாநகராட்சியின் பதில் !
பெருநகர சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் ட்ரக் வாகனத்தில் " பெருநகர சென்னை மாநகராட்சி, எங்கேயும் எப்போதும் " என்பதற்கு நடுவில் கிறிஸ்தவ சிலுவை போன்ற லோகோ இடம்பெற்று இருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.



Twitter link | Archive link



மாநகராட்சி லோகோவில் சிலுவை, என்னதான் நடக்கிறது இங்கே, திமுக தமிழகத்தை கிறிஸ்தவமயமாக்க முயற்சிக்கிறதா என பாஜகவினர் பலரும் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தில் இடம்பெற்ற லோகோ சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் லோகோ குறித்து தேடிப் பார்க்கையில், இதற்கு முன்பாக மற்றும் சென்னை மாநகராட்சி உடைய இணையதளத்தில் இடம்பெற்ற அதேபோன்ற வாகனத்தில் இடம்பெற்ற லோகோ ஒவ்வொன்றும் சிறிது வேறாக இருப்பதை பார்க்க முடிந்தது.





இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் மெக்கானிக்கல் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், " அது பழைய லோகோ. எங்களுக்கும் நேற்று தான் அனுப்பி இருந்தார்கள். இந்த லோகோ லைட் ஹவுஸ் போன்ற வடிவத்தில் முயற்சித்து உள்ளனர். ஒவ்வொரு முறையும் வரையும் போது வடிவம் மாறி இருக்கிறது. அது சிலுவை அல்ல. ஆண்டுக்கு ஒருமுறை வாகனத்தை அனுப்புவோம், கடந்த ஆண்டு எப்.சி போயிட்டு வந்த பிறகு லோகோ இப்படி வரையப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏதும் பண்ணவில்லை. அதை மாற்ற சொல்லி இருக்கிறோம். இனி வாகனங்களில் சென்னை மாநகராட்சியின் புதிய லோகோவை வரைய உத்தரவிடப்பட்டுள்ளது " எனத் தெரிவித்து இருந்தனர்.



சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் ட்ரக் வாகனங்களில் சிலுவை போன்ற லோகோ  இடம்பெற்றதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அது சிலுவை அல்ல, லைட் ஹவுஸ் போன்ற வடிவில் இருந்த லோகோ தவறாக வரையப்பட்டு உள்ளதாகவும், அதுவும் சமீபத்தில் இல்லை சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இனி சென்னை மாநகராட்சி வாகனங்களில் மீன், புலி, வில் ஆகியவை இடம்பெற்ற புதிய லோகோவே இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை