YouTurn

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்ட தினமலர்.. கலாய்க்கும் நெட்டீசன்கள் !

2008-ம் ஆண்டில் சந்திராயன்-1 வெற்றிக்கு பிறகு சந்திராயன்-2-க்கான திட்டம் 2009-ல் இருந்து தொடங்கி தற்பொழுது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் கடுமையான பணிகளின் பலனாக சந்திராயன்-2 பணிகள் முழுவதும் முடிந்த பிறகு ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன்...

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்ட தினமலர்.. கலாய்க்கும் நெட்டீசன்கள் !
2008-ம் ஆண்டில் சந்திராயன்-1 வெற்றிக்கு பிறகு சந்திராயன்-2-க்கான திட்டம் 2009-ல் இருந்து தொடங்கி தற்பொழுது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் கடுமையான பணிகளின் பலனாக சந்திராயன்-2 பணிகள் முழுவதும் முடிந்த பிறகு ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சந்திராயன்-2 GSLV MK ||| ராக்கெட் மூலம் இன்று(ஜூலை 15) அதிகாலை 2.50 மணி அளவில் விண்ணில் ஏவப்பட தயாராக இருந்தது. இதற்கான கவுண்டன் 20 மணி நேரத்திற்கு முன்பாக ஜூலை 14-ம் தேதி தொடங்கியது.



ஆனால், கவுண்டன் முடிவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவத் தயாராக இருந்த ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடனடியாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.



பின்னர் இறுதியாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.



இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என ஜூலை 15-ம்தேதி தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகி விட்டன. தினமலர் நாளிதழின் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தாலும், அவை நீக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், செய்தியின் தலைப்புகளை கூகுளில் காண முடிகிறது.



ஆனால், தினமலர் செய்தித்தாளில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என்ற செய்தி வெளியாகி விநியோகமும் செய்யப்பட்டு விட்டது. சந்திராயன்-2 ஏவப்பட்டது என தினமலர் செய்தித்தாளில் வெளியாகிய செய்தியை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டீசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தற்பொழுது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



எனினும், நிலவிற்கு செல்ல இருந்த சந்திராயன் விண்கலம் பயணம் நிறுத்தப்பட்டது தொடர்பாக " சந்திராயன்-2 பயணம் திடீர் ஒத்திவைப்பு " என தினமலரின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

சந்திராயன்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அது குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள சந்திராயன்-2 திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், நிலவில் எந்தவொரு நாடும் செல்லாத தென்துருவத்தை ஆய்வு செய்து சந்திராயன்-2 சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை