பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை வழங்குகிறதா?

எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருதைக் குடியரசுத் தலைவர் வழங்கும் போது உடன் இருந்த பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் முர்முவிற்கு உரிய மரியாதை அளிக்காமல் அமர்ந்திருந்தார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பழங்குடியின பெண் என்பதால் பாஜகவினர் அவருக்கு மரியாதை செலுத்தாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகிறது.
देश की महामहिम राष्ट्रपति खड़ी हैं और PM मोदी बैठे हैं।
एक बार फिर PM मोदी ने जानबूझकर आदिवासी महिला राष्ट्रपति का अपमान किया है।
यह पहली बार नहीं है- जब नई संसद का उद्घाटन हुआ तब उन्हें बुलाया नहीं गया और राम मंदिर के प्राण प्रतिष्ठा कार्यक्रम में भी राष्ट्रपति जी नहीं दिखीं।… pic.twitter.com/pbH2aR5CT4
— Congress (@INCIndia) March 31, 2024
இந்திய அரசு வழங்கக் கூடிய விருதுகளில் மிக உயரியதாகக் கருதப்படும் பாரத ரத்னா 1954ம் ஆண்டு முதல் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி பீகாரைச் சேர்ந்த மறைந்த முன்னால் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23ம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
The Pm is sitting with a man who holds no constitutional office while the Hon president of the nation is left standing. Respect for women , respect for the office of the president etc ??? pic.twitter.com/kes57JwikJ
— kishore k swamy (@sansbarrier) March 31, 2024
இந்த விருது வழங்கும் விழா கடந்த மாதம் 30ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களில் 4 பேர் காலமானவர்கள் என்பதால் அவர்களில் வாரிசுகள் அந்த விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக எல்.கே.அத்வானி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எனவே அத்வானிக்கான விருதை டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று மார்ச் 31ம் தேதியன்று குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அப்போது பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வின் போது குடியரசுத் தலைவர் பெண் என்பதாலும் பழங்குடியினர் என்பதாலும் அவரை நிற்க வைத்துவிட்டு மோடி அமர்ந்து கொண்டுள்ளார் என்கிற விமர்சனத்தை எதிர்க் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.
As a parliamentarian, his emphasis on dialogue enriched parliamentary traditions. Whether as Home Minister or as Deputy Prime Minister, he always prioritised national interest above all, earning him respect and admiration from across party lines. His long and tireless struggle… pic.twitter.com/XGckO3Bup2
— President of India (@rashtrapatibhvn) March 31, 2024
அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குடியரசுத் தலைவரின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அத்வானி மற்றும் மோடியின் முன்னால் முர்முவும் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
விருது வழங்கும் போது குடியரசுத் தலைவர் நின்று கொண்டு இருக்கிறார். அத்வானி வயது மூப்பின் காரணமாக அமர்ந்துள்ளார். ஆனால், மோடியோ மரியாதை நிமித்தமாகக் கூட எழுந்து நிற்கவில்லை.
முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை ஒன்றிய பாஜக அரசு அழைக்கவில்லை. அப்போதே இது குறித்த கண்டனங்கள் எழுந்தன. பாஜக தலைவர்களின் இத்தகைய செயல்கள் குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதையும் அங்கிகாரமும் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.