YouTurn

பிரதமரால் திறக்கப்பட்டு சில நாட்களான புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் பகுதியில் மழையால் பள்ளம் !

பிரதமரால் திறக்கப்பட்டு சில நாட்களான புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் பகுதியில் மழையால் பள்ளம் !
ஜூலை 16-ம் தேதி பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறந்த வைத்த புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் பகுதியில் மழையால் பள்ளம் உருவாகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

296 கிலோமீட்டர் நீளம் கொண்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையானது சித்தரக்கூடில் உள்ள பாரத்கூப் மற்றும் எட்டவாவில் உள்ள குத்ரேலுடன் இணைந்து ஏழு மாவட்டங்களை கடந்த செல்கிறது.

இந்த விரைவுச்சாலை பயணிக்கும் ஜலான் மாவட்டத்தின் சேலம்பூர் அருகே உள்ள சிரியா பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் சாலையின் ஒரு பகுதியில் 1.5 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகி உள்ளது. பள்ளதால் இரு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி உள்ளது.

" சாலையில் உருவான பள்ளத்தை சரிசெய்ய புல்டோசர்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் உடன் ஒரு குழுவை ஆணையம் அனுப்பியது. பள்ளங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டது " என உத்தரப் பிரதேசத்தின் தொழில்துறை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் உபாத்யாய் தெரிவித்து உள்ளார்.



பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட விரைவுச் சாலையின் பகுதியில் சில நாட்களிலே மழையால் பள்ளம் உருவான சம்பவத்திற்கு சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.



இதுதொடர்பாக பாஜக எம்பி வருண் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், " 15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விரைவுச்சாலை 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றால், அதன் தரம் குறித்து பலத்த கேள்வி எழுகிறது. இதற்கான திட்ட தலைவர், சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் பொறுப்புள்ள நிறுவனங்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.

பிரதமரால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் நடுவே பள்ளம் உருவான மற்றும் அதை சரிசெய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, சாலையின் தரம் குறித்த கேள்விகளும் எழுப்பட்டு வருகிறது.

links :

Portion of Bundelkhand expressway develops potholes due to rains, days after opening by PM Modi
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை