YouTurn

டெல்லி பிஜேபி இணையதளத்தில் பீஃப் விளம்பரங்கள்|ஹக்கர்களின் விளையாட்டு.

பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசாக பதவியேற்கும் நாளில் அக்கட்சியின் டெல்லி பிரிவைச் சேர்ந்த delhi.bjp.org தளத்தில் மாட்டுக்கறி இறைச்சி தொடர்பான புகைப்படங்கள், பதிவுகள், உணவு வகைகள் மட்டுமின்றி Beef History, Beef Constitution என்றெல்லாம் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. site :...

டெல்லி பிஜேபி இணையதளத்தில் பீஃப் விளம்பரங்கள்|ஹக்கர்களின் விளையாட்டு.
பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசாக பதவியேற்கும் நாளில் அக்கட்சியின் டெல்லி பிரிவைச் சேர்ந்த delhi.bjp.org தளத்தில் மாட்டுக்கறி இறைச்சி தொடர்பான புகைப்படங்கள், பதிவுகள், உணவு வகைகள் மட்டுமின்றி Beef History, Beef Constitution என்றெல்லாம் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. site : http://delhi.bjp.org/#



பிஜேபி கட்சியின் அதிகாரப்பூர்வ தளத்தை ஹக்கர்கள் ஹக் செய்து இவ்வாறு மாற்றி அமைத்து உள்ளனர். இந்த செய்தி ட்விட்டரில் பேசும் பொருளாக வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.


ஹக்கரான Elliot Alderson தனது ட்விட்டர் கணக்கில் டெல்லி பிஜேபி தளத்தில் மாட்டுக்கறி உணவு இருக்கும் படத்துடன் உங்களின் தளம் ஹக் செய்யப்பட்டு உள்ளது எனக் கிண்டல் பதிவை வெளியிட்டு உள்ளார்.



Elliot Alderson பதிவை அடுத்து டெல்லி பிஜேபியின் இணையதளம் ஹக் செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை மாற்றி அமைக்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை.

இதனை சமாளிக்கும் வகையில் டெல்லி பிஜேபி தளத்திற்கு செல்ல முயற்சிப்பவர்கள் நேரடியாக பிஜேபி தலைமை தளத்திற்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்து உள்ளனர்.

ஏற்கனவே, மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆக பதவியேற்கும் நாளில் #modisarkar2.0-வை விட #nesamani மற்றும் #prayfornesamani ட்விட்டர் ட்ரென்டிங்கில் முந்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

Proof : Beef served on hacked BJP Delhi website as Modi 2.0 takes oath
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை