YouTurn

பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை !

பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை !
பாரத் கேஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து செயலியின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இடம்பெறாதது கண்டனத்தை பெற்று உள்ளது.





Facebook link | archive link 



Facebook link | archive link 

தமிழ் மொழி இடம்பெறவில்லை என்கிற பதிவுகளில் சிலர் செயலியில் தமிழ் மொழி இடம்பெற்று இருக்கிறது, தவறான தகவலை பகிர வேண்டாம் என மற்றொரு ஸ்க்ரீன்ஷார்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.





ஆனால், அந்த ஸ்க்ரீன்ஷார்ட் செயலியில் இடம்பெற்றது அல்ல, கூகுள் ப்லேஸ்டோரில் செயலி குறித்து இடம்பெறும் தகவல் உடன் வழங்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களே. பாரத் கேஸ் செயலியை டவுன்லோடு செய்து மொழி விருப்பத்தை தேர்வு செய்கையில் " தமிழ் " மொழி இடம்பெறவில்லை. உதாரணத்திற்காக காட்டப்பட்ட புகைப்படத்தில் தமிழ் இருக்கிறது, ஆனால் செயலியில் தமிழ் விருப்பம் இல்லை. 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாரத் கேஸ் செயலியை டவுன்லோடு செய்து உள்ளனர்.

[video width="288" height="640" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2020/08/WhatsApp-Video-2020-08-22-at-11.04.44-PM.mp4"][/video]

 

Update :

பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இருப்பதாக சிலர் யூடர்ன் முகநூல் பதிவின் கம்மெண்ட்டில்பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், பாரத் கேஸ் செயலியின் version 2.2.5-ல் தமிழ் மொழி இடம்பெறவில்லை. புதிதாக செயலியை டவுன்லோடு செய்து வாடிக்கையாளர் செல்போன் எண்ணை கொடுத்து பார்த்தும் கூட தமிழ் மொழி இடம்பெறவில்லை.



 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை