YouTurn

மே.வ வன்முறையில் இறந்ததாக உயிருடன் இருப்பவரின் படத்தை பயன்படுத்தி பாஜக வீடியோ !

மே.வ வன்முறையில் இறந்ததாக உயிருடன் இருப்பவரின் படத்தை பயன்படுத்தி பாஜக வீடியோ !
மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகு நிகழ்ந்த வன்முறை தாக்குதல்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறந்தது, பாதிக்கப்பட்டது குறித்து வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் உடன் கூடிய வீடியோ ஒன்று மேற்கு வங்க பாஜக மற்றும் பிஜேபி4இந்தியா உடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.



Twitter link | Archive link 

மேற்கு வங்கம் வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிட்ட வீடியோவில் உயிருடன், அதுவும் மேற்கு வங்கத்திற்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.



Facebook link | Archive link 

அப்ரோ பானர்ஜி என்பவர் பாஜக வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன், " நான் அப்ரோ பானர்ஜி. சிதல்குச்சியில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் நலமுடன் இருக்கிறேன். பாஜக ஐடி பிரிவு என்னை சிதல்குச்சியில் இறந்த மாணிக்  மொய்த்ரா எனக் கூறி வருகிறார்கள். தயவு செய்து போலி பதிவுகளை நம்ப வேண்டாம், கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் சொல்கிறேன், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.



அப்ரோ பானர்ஜி பதிவு வைரலாக தொடங்கிய பிறகு இந்த வீடியோ மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டாலும் பிஜேபி4இந்தியா எனும் பக்கங்களில் இருந்து நீக்கப்படவில்லை. பாஜக வெளியிட்ட 5.38 நிமிட வீடியோவின் 2.35வது நிமிடத்தில் மாணிக்  மொய்த்ரா என இவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

" மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த வன்முறையில் பலியான 9 பேரின் பெயர்களை பாஜக முன்பு பகிர்ந்து கொண்டது. அவர்களில் சிதல்குச்சியில் கொல்லப்பட்ட மாணிக் மொய்த்ரா மற்றும் மிந்து பார்மன் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இருப்பினும், " மாணிக் மொய்த்ரா " என யாரும் அடையாளம் காணப்படவில்லை " என இந்திய டுடே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ரோ பானர்ஜி இந்தியா டுடேவைச் சேர்ந்த பத்ரிக்கையாளர் எனக் கூறப்படுகிறது. தன் புகைப்படத்தை பயன்படுத்தி இறந்தவர் என பாஜக வீடியோ வெளியிட்டனர் என அப்ரோ பானர்ஜி பதிவிட்ட பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை