ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு தேவர், நாடார், ராவூத்தர் பட்டம் கொடுக்கும் விஷமப் பதிவுகள்!

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என சாதனைப் படைத்தார்.
கடந்த ஒலிம்பிக் போட்டியிடும் சரி, இந்த ஒலிம்பிக் போட்டியிலும் சரி பி.வி.சிந்துவின் சாதி குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டது. இந்நிலையில், பி.வி.சிந்து பதக்கம் வென்ற தகவலுடன் தமிழகத்தில் உள்ள சாதிகளின் மற்றும் மதங்களின் பட்டத்துடன் கூடிய விஷம பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

" பரமக்குடி ஜமீன், தாத்தா லேட் பெரியசாமித்தேவர் அவர்கள் பேத்தியும் பெரு நிலக்கிழார் பெரியப்பா திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை PV சிந்து என்ற சிவகாமி நாச்சியார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ! " எனும் ஓர் பதிவு வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்டவையில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Facebook link | Archive link
Durai Thevan CP எனும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இப்பதிவு நையாண்டியாகவே பதிவிடப்பட்டுள்ளது. இதை நையாண்டியாக வெளியிட்டதை உறுதிப்படுத்தும் சில பதிவுகளும் அந்த முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, கிறிஸ்தவ நாடார், முஸ்லீம் ராவூத்தர் என ஆளாளுக்கு பட்டம் கொடுத்து நையாண்டியாக விஷமப் பதிவுகளை வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள்.
Facebook link | Archive link
Facebook link | Archive link

ஒருவர் நையாண்டிக்காக உருவாக்கிய விஷமப் பதிவு என சிலருக்கு தெரிந்தாலும், அதை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டாலும் கூட அந்த பதிவை பலரும் உண்மை என நினைத்து அந்த பதிவை அப்படியே வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் தவறாக பகிர்ந்து வருகிறார்கள். அதவும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
1995ம் ஆண்டில் பி.வி.ரமணா மற்றும் பி.விஜயா என்ற தம்பதியருக்கு ஹைதராபாத் பகுதியில் பி.வி.சிந்து பிறந்தார். கடந்த முறை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு சிந்துவிற்கு பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கையில், சாதிகளின் பட்டத்துடன் நையாண்டியாக பதிவிடுவதாக நினைத்துக் கொண்டு இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்ற விளையாட்டு வீராங்கனையை வைத்து விஷமப் பதிவுகளை பதிவுடுவது தேவையற்றது, கண்டிக்கத்தக்கது.