கருத்துக்கணிப்பா? கருத்துத்திணிப்பா? அரசியல் கட்சி சார்புடன் இருக்கிறதா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்?
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று சி.என்.என் நியூஸ் 18 ஊடகத்தில் வெளியான கருத்துக்கணிப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பின்னல்கள் தற்போது வெளியே வந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும் தயாராகி வருகின்றன. இதனுடன் சேர்ந்து தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, மற்றும் இன்னும் பிற கட்சிகளும் களத்தில் உள்ளன.
இந்நிலையில் பலரும் எதிர்பார்த்து வந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை (Opinion Poll) பொறுத்தவரை தேர்தல் அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டு, தேர்தல் நெருங்கும் வரை பலமுறை எடுக்கப்படுவதுண்டு.
இந்நிலையில் CNN-நியூஸ்18-ல் வோட்வைப் (VoteVibe) நிறுவனத்தின், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் (Opinion Poll) மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
Vote Vibe நிறுவனம் வெளியிட்ட முதல் கட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகியவற்றை உள்ளடக்கிய திமுக தலைமையிலான கூட்டணிக்கு, 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குச் சற்று அதிகமாக, 113 முதல் 123 இடங்கள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவை உள்ளடக்கிய அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 106 முதல் 116 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தமிழக வெற்றி கழகம், 2 முதல் 8 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், Vote Vibe நிறுவனம் வெளியிட்ட இரண்டாம் கட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுக 115-125 தொகுதிகளிலும், திமுக 104-114 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
#OpinionPoll | Which party will emerge as the winner in the upcoming Tamil Nadu assembly polls?
Know what the Opinion Poll suggests #VoteTracker with @VoteVibeIndia #TamilNadu #Politics #BJP
Watch LIVE: https://t.co/MyF13YLx0e pic.twitter.com/XA9p24pFvd
மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் அதிமுக 130-140 தொகுதிகளிலும், திமுக 90-100 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#VoteTracker | What will seat sharing look like for political parties in #TamilNaduAssemblyElections?
Know what the #OpinionPoll predicts#TamilNadu #TamilNaduElections | @VoteVibeIndia
Watch LIVE: https://t.co/vKwMT7UJ0M pic.twitter.com/3OuCtZW0GV
CNN நியூஸ்18-வோட்வைப் கருத்துக்கணிப்பின் பின்னணி:
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று சி.என்.என் நியூஸ் 18 ஊடகத்தில் வெளியான கருத்துக்கணிப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சைக்குரிய வலைப்பின்னல்கள் தற்போது வெளியே வந்துள்ளன.
Vote Vibe நிறுவனம் எடுத்த மூன்றாம் கட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுக 130-140 தொகுதிகளிலும், திமுக 90-100 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு இதுவரை வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு மாறாக அமைந்திருப்பது பேசுபொருளானது.
இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட Vote Vibe நிறுவனத்தின் நிறுவனராக அமிதாப் திவாரி இருக்கிறார். ஏற்கனவே இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டு தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கும் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது. Pramanya Stratergy என்ற நிறுவனமும், Vote Vibe நிறுவனமும் சேர்ந்துதான் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை நடத்தின.

Vote Vibe நிறுவனர் அமிதாப் திவாரிக்கும், Pramanya Strategy நிறுவனர் ஹரி கசுலாவுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. Vote Vibe நிறுவனத்துடன் தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்காக கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த Pramanya Strategy நிறுவனம் தான் தற்போது தேர்தல் பணிக்காக அதிமுகவிற்கு வியூக வகுப்பாளராக வேலை செய்து வருகிறது.
ஒரு அரசியல் கட்சிக்கு வியூக வகுப்பாளராக இருக்கும் நிறுவனம், தேர்தல் கருத்துக்கணிப்பு என்பதிலும் வேலை செய்தால் அந்த முடிவுகள் எப்படி பாரபட்சமற்ற தகவல்களை வழங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்படி ஒரே நிறுவனம் அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக ஒரு புறமும், இன்னொரு பக்கம் கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனமாகவும் இரண்டு முகங்களை வைத்துக் கொண்டு செயல்படுவது தேர்தல் கருத்துக்கணிப்பு என்பதன் மீதான நம்பகத்தன்மைக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.
மேலும் இத்தகைய கருத்துக்கணிப்புகள் தேர்தல் நேரத்தில் மக்களிடையே கருத்துத் திணிப்பை செய்வதற்காக நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.