YouTurn

அண்ணப்பூர்ணா சர்ச்சை: கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமா? 18 சதவீதமா?

கிரீம் பன்னுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 18 சதவீதமா? 5 சதவீதமா என்கிற சர்ச்சை பெரும் விவாத பொருளாகியுள்ளது. கிரீம் பன்னுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஜிஎஸ்டி எவ்வளவு? அன்னபூர்ணா சீனிவாசன் சொன்னது சரியா தவறா என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

அண்ணப்பூர்ணா சர்ச்சை:  கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமா? 18 சதவீதமா?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவை வந்திருந்தார். கோவையில் உள்ள தொழில்துறையினரைச் சந்தித்தபோது அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்துப் பேசிய வீடியோ இந்தியா முழுவதும் பேசுபொருளானது. 



”இனிப்புக்கும், காரத்துக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால், பன்னுக்குள் கிரீம் வைத்துவிட்டால் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறியிருந்தார்.


சீனிவாசன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான அதே வேகத்தில், அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்தனர். 


அன்னபூர்ணா கிரீம் பன்:


இந்நிலையில் அன்னபூர்ணா உணவகத்தில் கிரீம் பன்னுக்கு 5 சதவிகிதம் தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக மகேஷ் (mahesh_update_) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பில்லுடன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். 


https://www.instagram.com/p/C_5QeuqNZ-W/


அந்த வீடியோவை பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வ குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ”அன்னபூர்ணாவில் கிரீம் பன்னுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே! 18% என பரவிய தகவல் திமுகவால் திட்டமிட்டு பரப்பப்பட்ட  பொய். ஒருவேளை இதுவரை தவறாக 18% வசூலித்த விட்டு தேசிய அளவில் பேசுபொருளாக ஆன பிறகு, தற்போது சரியான வரி 5% வசூலிக்கபடுகிறதா? யாரிடமாவது 18% வசூலித்த பில் இருந்தால் இங்கு பகிரவும்” எனக் கூறியிருந்தார். 


https://x.com/i/web/status/1835129544245665822


இதற்கு யூடர்ன் தரப்பிலிருந்து கிரீம் பன்னுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்த பில்லினை பதிவிட்டோம். அதற்கு 'தான் பதிவிட்ட பில் Non AC கிளையில் வழங்கப்பட்டது. ஆனால், யூடர்ன் பில் AC கிளையில் வழங்கப்பட்டது' எனப் பதில் அளித்தார். 


எனவே செல்வகுமார் பதிவிட்ட அதாவது மகேஷின் வீடியோவில் உள்ள அதே கணபதி பாரதி நகர் கிளையில் கிரீம் பன் வாங்கினோம். அங்கும் 18 சதவிகிதம்தான் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. 


annapoorna cream bun


இதற்கிடையில் கிரீம் பன்னுக்கு 18 சதவிகிதம்தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக ஒருவர் மகேஷுக்கு அனுப்பிய பில்லை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


அன்னபூர்ணா கிரீம் பன்

பில் தேதி

GST

14.09.2024 

(மகேஷ் வாங்கியது)

5%

15.09.2024 

18%

16.09.2024

18%

17.09.2024

18%

மேற்கண்ட பில்களில் இருந்து அன்னபூர்ணா நிறுவனம் கீரிம் பன்னுக்கான ஜிஎஸ்டி சதவிகிதத்தை மாற்றியுள்ளதை அறிய முடிகிறது. 14ஆம் தேதி பில்லில் 5 சதவிகிதம் என்றும் அதற்கு பிறகான பில்களில் 18 சதவிகிதம் என்றும் இருப்பது குறித்து அன்னபூர்ணா நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். இதுதொடர்பாகப் பதில் அளிக்கக்கூடிய அதிகாரி தற்போது இல்லை என்றும் அவர் வந்ததும் தொடர்புகொண்டு பதில் அளிப்பதாகவும் கூறி நமது தொலைப்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர்கள் மேற்கொண்டு அழைத்து பதிலளித்தால் அதனையும் இக்கட்டுரையில் இணைப்போம்.


’அன்னபூர்ணா நிறுவனம் 18 சதவிகிதமெனத் தவறான ஜிஎஸ்டி வசூலித்துவிட்டு தற்போது சரியான 5 சதவிகிதத்தை வசூலிக்கிறதா?’ என செல்வகுமார் எழுப்பும் கேள்வியும் தவறானது. ஏனென்றால் கிரீம் சேர்க்கப்பட்ட பேக்கரி பொருட்களுக்கு 18 சதவிகிதம் தான் அரசு தரப்பில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 


ஒருவேளை அன்னபூர்ணா நிறுவனம் தவறாக 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்திருந்தால், அவர்கள்மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை