YouTurn

ஏர் இந்தியாவை டாடா ஏலத்தில் வாங்கியதாக வெளியான செய்திக்கு அரசு மறுப்பு !

ஏர் இந்தியாவை டாடா ஏலத்தில் வாங்கியதாக வெளியான செய்திக்கு அரசு மறுப்பு !
கடன் சுமையால் மூழ்கியுள்ள இந்திய அரசின் விமான போக்குவரத்துத்துறையான ஏர் இந்தியா நிறுவனத்தை சில ஆண்டுகளாகவே விற்கும் முயற்சியில் ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அதேபோல், அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம்  விருப்பம் தெரிவித்து இருந்தது.

கொரோனா சூழலுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியது. ஏல விவரங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக அறிவித்தது. இதில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை அரசுக்கு சமர்ப்பித்து இருந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழும தரப்பில் அளிக்கப்பட்ட தொகை ஏலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மீண்டும் ஏர் இந்தியா டாடா நிறுவனத்தின் வசமே செல்கிறது என இந்திய அளவில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இத்தகவல் ஒன்றிய அரசின் தரப்பில் மறுக்கப்பட்டு இருக்கிறது.



Twitter link 

ஏர் இந்தியா விசயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஏலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் தவறானவை. அரசாங்கம் முடிவு எடுத்த பிறகு அதுகுறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை