சமந்தாவும் ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பான சர்ச்சையும்! மருத்துவர்கள் கூறுவதென்ன?
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில ஆண்டுகளாகவே தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் “Lets Talk About Health” என்ற தலைப்பில் உடல்நலம் தொடர்பான Podcast ஒன்றையும் கடந்த சில வாரங்களாகவே பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு, மருத்துவ ஆலோசனை தொடர்பாக ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். அதில், “பொதுவான வைரல் தொற்றுக்கு ஒருவர் மருந்தை எடுத்துக்கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயன்று பாருங்கள். அப்படியான ஒரு வழிதான், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சிய வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யும் முறை. மேஜிக்கைப்போல வேலை செய்யும். தேவையில்லாத மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில ஆண்டுகளாகவே தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் “Lets Talk About Health” என்ற தலைப்பில் உடல்நலம் தொடர்பான Podcast ஒன்றையும் கடந்த சில வாரங்களாகவே பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு, மருத்துவ ஆலோசனை தொடர்பாக ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.

அதில், “பொதுவான வைரல் தொற்றுக்கு ஒருவர் மருந்தை எடுத்துக்கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயன்று பாருங்கள். அப்படியான ஒரு வழிதான், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சிய வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யும் முறை. மேஜிக்கைப்போல வேலை செய்யும். தேவையில்லாத மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.
சமந்தாவின் இந்தப் பதிவுக்கு எதிராக மருத்துவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக எக்ஸ் தளத்தில் ‘The Liver Doc’ என்ற பெயரில், இயங்கி வரும் சிரியக் அபி ஃபிளிப்ஸ் (Cyriac Abby Philips) என்ற கல்லீரல் சிறப்பு மருத்துவர், கடுமையாக விமர்சித்திருந்தார்.
Left: Influential Indian actress Ms. Samantha Ruth who is unfortunately a health and science illiterate advising millions of her followers to inhale hydrogen-peroxide to prevent and treat respiratory viral infections.
— TheLiverDoc (@theliverdr) July 4, 2024
Right: Scientific society, The Asthma and Allergy Foundation… pic.twitter.com/Ihn2xocKUt
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம், Hydrogen Peroxide Nebulisation பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்கிறது. பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இவருக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவியோ ஆலோசகரோ தேவைப்படுகிறது. இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இதுபோன்ற பிரபலங்கள் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பது குறித்து ஏதேனும் செய்வார்களா? அல்லது முதுகெலும்பில்லாமல் மக்களை இறக்க விடுவார்களா?” என்றும் கூறி கடுமையாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூலை 05 அன்று விளக்கமளித்து மற்றுமொரு பதிவையும் பதிவுசெய்துள்ளார்.
அதில், “கடந்த 2 ஆண்டுகளாக, நான் பல வகையான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறேன். எல்லாமே நிச்சயமாக நான் எடுக்க வேண்டியவை என எனக்கு பரிந்துரைக்கப்பட்டவை மட்டுமே. தகுதிபெற்ற நிபுணர்களால், பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகே எனக்கு அனைத்தும் பரிந்துரைக்கப்பட்டன.
அதிலும் இந்த சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. இந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள எனக்கு வசதியும் பணமும் இருந்தது. ஆனால் இவற்றை பெறமுடியாதவர்கள் பற்றி நான் எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். ஆகவே பல கட்ட ஆலோசனைக்குப் பின்னர், பலமுறை யோசித்து நான் எடுத்த முடிவுதான் இந்த மாற்று முறை மருத்துவம். எனக்கு அவை முழுமையாகவும் ஆச்சரியமளிக்கும் வகையிலும் பயனளித்தன.
நான் எப்போதுமே சிகிச்சையில் மிக மிக கவனமாக இருப்பேன். அப்படி எனக்கு நல்ல பலன் அளித்த சிகிச்சை பற்றி சமீபத்தில் நான் பகிர்ந்திருந்தேன். எனக்கு அவற்றை பரிந்துரைத்தது நன்கு படித்த அங்கீகாரம் பெற்ற மருத்துவர்தான். 25 வருடங்களாக அவர் மருத்துவ சேவையில் இருக்கிறார். அவர்தான் என்னை மாற்று மருத்துவத்தை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தினார்.
ஆனால் என்னுடைய பதிவுக்கு, மருத்துவரென்ற பெயரில் கடுமையான வார்த்தைகளோடு ஒரு நபர் பதிலொன்று தந்திருந்தார். அவருடைய நோக்கம் நல்லதாகவே தெரிகிறது. ஆனால் வார்த்தைகளில் அவர் சற்று பொறுமையையும் கனிவையும் கடைபிடித்திருக்கலாம். குறிப்பாக, ‘நான் சிறையில் தள்ளப்படவேண்டியவள்’ என அவர் கூறியுள்ளார். நானொரு பிரபலம் என்பதால் இப்படி நடக்கலாம்… ஆகவே நான் அதை கண்டுகொள்ள விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரை நான் செய்ததெல்லாம், நான் சுயமாக எடுத்துப்பார்த்து, எனக்கு பலனளித்த ஒரு மருத்துவத்தை, இன்னொருவருக்கு பரிந்துரை செய்தது மட்டுமே. பிரபலமாக இல்லாத சிலருக்கும் இதுபோன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம் அல்லவா… சிலருக்கு இன்றுள்ள மருத்துவம் வேலை செய்யாமல் போகலாம் அல்லவா… அவர்கள் வேறு வழியை தேடலாம்… அதுவும் சற்று குறைந்த விலையில். அப்படியானவர்களுக்காகவே நான் அந்தப் பதிவிட்டேன். மற்றபடி இதன்மூலம் நான் பணம் எதுவும் பெறவில்லை. யாரையும் இதை பயன்படுத்த சொல்லி வலியுறுத்தவும் இல்லை.
சம்பந்தப்பட்ட அந்த ‘மருத்துவர்’, என் மருத்துவரையே அழைத்து ‘ஏன் அந்த மருத்துவ முறையை பரிந்துரை செய்திருந்தீர்கள்’ என கேட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். அப்படி இரு தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்கள் விவாதிப்பதையும், விவரிப்பதையும் பார்க்க நானும் ஆவலாகவே இருக்கிறேன்.
மற்றபடி, என் உடல்நலன் மேம்பட எனக்கு உதவிய மருத்துவ முறைகள் பற்றி நான் பகிரும் ஒவ்வொரு தகவலும், மற்றவர்களுக்கும் அது பயன்படும் என்பதற்காகத்தான். யாரையும் புண்படுத்த அல்ல. எத்தனையோ பெரிய மனிதர்ளும் கூட ஆயுர்வேதா, ஹோமியோபதி, அக்குபஞ்சர், திபெத்திய மருத்துவ முறை, ஆரா போன்ற முறைகளை பரிந்துரை செய்துள்ளனர். அப்படியான ஒன்றையே நானும் செய்திருக்கிறேன். எனக்கு பயன் தந்த ஒரு விஷயத்தை, நான் பகிர்ந்தேன், அதுவும் ஒரு விருப்பமாக மட்டுமே” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமந்தாவின் “Hydrogen Peroxide Nebulisation முறை“ குறித்த பதிவு சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
சமந்தாவும் உருட்டும் !!!
— Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) July 4, 2024
சமந்தா சொல்றா மாதிரி Hydrogen Peroxideய், Nebulizerல் கலந்து உள்ள இழுத்தால், நுரையீரல் மொத்தமாக பாதிக்க படும். இது COVID கால கட்டத்தில் இருந்து உலாவரும் ஒரு விஷயம். இதை பின் பற்றி பல பேரு பாதிப்புக்கு உள்ளாகினர். Hydrogen Peroxide வீட்டு சுத்தம் செய்ய… pic.twitter.com/95uu3MCpcz
எனவே Hydrogen Peroxide Nebulisation முறையை அனைவரும் பயன்படுத்தலாமா? அல்லது Hydrogen Peroxide பயன்படுத்தி Nebulisation செய்வதால் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போல ஒருவருக்கு நுரையீரல் மொத்தமாக பாதிக்கப்படுமா? என்பது குறித்து நமது யூடர்ன் தரப்பிலிருந்து, மருத்துவர் பிரவீன் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். நமக்கு பதிலளித்து பேசிய அவர், “மருத்துவத்துறையில், ஹைட்ரஜன் பெராக்சைடை ஒரு மருந்தாக Nebulizer இல் அனைவரும் பயன்படுத்துவது கிடையாது. அது ஒருவகை Sterlizing Agent. சுத்தம் செய்வதற்காகவும், பாக்டீரியாவை சுத்தப் படுத்துவதற்காவும், மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்வதற்காகவும், ஒரு Cleaning Agent ஆகவே பயன்படுத்தப்படுகிறது.
முதலாவதாக, மிக அரிதாகவே அலோபதி மருத்துவத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடை Nebulizer இல் பயன்படுத்த பரிந்துரை செய்வோம். ஆனால் அனைவரும் ஹைட்ரஜன் பெராக்சைடு-ஐ Nebulizer ஆக பயன்படுத்துவது சரியான முறையல்ல. அடுத்ததாக, மற்ற மருத்துவர்கள் இதுகுறித்து கூறியுள்ளபடி, ஹைட்ரஜன் பெராக்சைடை Nebulizer ஆக பயன்படுத்தும் போது நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயை (lungs and trachea ) இது சேதப்படுத்தி, மற்ற உறுப்புகள் வரை சென்று சேதப்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் Scientific Medical Approach படி, ஹைட்ரஜன் பெராக்சைடை நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவது சரியான முறையல்ல. பெரும்பாலான நேரங்களில் காலில் அடிபட்ட இடத்திலோ, அறுவை சிகிச்சை செய்த இடங்களில் ஏற்பட்டுள்ள புண்களில் உள்ள Infections-ஐ நீக்குவதற்கே ஹைட்ரஜன் பெராக்சைடை நாங்கள் பயன்படுத்துவோம். அதாவது புண்களை சுத்தம் செய்வதற்காக (To clean the wound) பயன்படுத்துவோம். ஆனால் Nebulizer ஆகவோ, Lung Treatment காகவோ பயன்படுத்துவது சிறந்த அணுகுமுறையல்ல” என்று தெளிவாகக் கூறினார்.
இதன்மூலம் மிக அரிதாகவே அலோபதி மருத்துவத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடை Nebulizer இல் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், சமந்தாவிற்கு அவருடைய மருத்துவர் பிரத்யேகமாக பரிந்துரைத்த ஹைட்ரஜன் பெராக்சைடு Nebulizer முறையை, மாற்றுவழி மருந்தாக தன்னுடைய பொதுத்தளத்தில் அனைவருக்கும் பரிந்துரை செய்தது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற பிரபலங்களின் சமூக ஊடகப் பதிவுகளை பின்பற்றாமல், தங்களது உடல்நலனுக்கு ஏற்றவாறு மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமே சரியான தீர்வாகவும் அமையும்.!