2022 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரியைக் குறைத்ததாக தவறான செய்தி : இந்திய வருவமானவரித்துறை !

இதற்கிடையில், 2022 பட்ஜெட் அறிக்கையில் கார்ப்பரேட் வரி விதிப்பு குறைக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியாகி வருகிறது என இந்திய வருமானவரித்துறை ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.
A FAKE news is being spread reg reduction of Corporate Tax in the Budget.
The correct position is that AMT for co-op societies is being reduced to 15% from 18.5% to bring parity bet co-op societies & companies. Refer tweet below@PIBFactCheck @FinMinIndiahttps://t.co/ufHnXHppjv
— Income Tax India (@IncomeTaxIndia) February 1, 2022
Twitter link
" பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்து ஒரு போலி செய்தி பரப்பப்படுகிறது. உண்மை என்னவென்றால், கூட்டுறவு சங்கங்களுக்கான ஏஎம்டி 18.5%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது " என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
மேலும், " கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி விகிதம் (ஏஎம்டி) 15% ஆக முன்மொழியப்பட்டு, நிறுவனங்களின் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்துவதற்கு இணையாகக் கொண்டுவரப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மீதான கூடுதல் கட்டணம் தற்போதைய 12% லிருந்து 7% ஆக குறைக்கப்படும் " என பட்ஜெட் குறித்து வெளியிட்ட ட்வீட் பதிவையும் சேர்த்து ந்திய வருமானவரித்துறை பதிவிட்டு உள்ளது.
Fake news is being spread about reduction of Corporate tax in the Budget. #PIBFactCheck
▶️ Government has proposed to reduce the Alternate Minimum Tax rate for co-operative societies to 15% from the current 18.5%. pic.twitter.com/FVvUjU2zaD
— PIB Fact Check (@PIBFactCheck) February 1, 2022
Twitter link
இதேபோல், " NDTV சேனலில் 2022 பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் போது கார்ப்பரேட் வரி குறைப்பு என தவறானச் செய்தி வெளியிட்டதாக " PIB Factcheck ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.
2022 பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியில் மாற்றமில்லை, ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியைப் பொறுத்தவரையில் பலன்பெறும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்பே அரசு அறிவித்த 15% கார்ப்பரேட் வரி விகிதத்தை ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.