2021 வெள்ளை அறிக்கை: ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன், தமிழக அரசின் ஒரு நாள் வட்டி ரூ.87 கோடி !

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை தொடர்பாக வெளிப்படையான விளக்கத்தை தரும் வெள்ளை அறிக்கையை இன்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.
மாநில கடன் தொகை :
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையால் தொடர்ந்து உயர்ந்து வரும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பெறப்படும் கடன்களால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, 31.3.22 வரை ஒட்டுமொத்த நிலுவைக் கடன் தொகை 5,70,189 கோடியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

2011-2012-ம் ஆண்டில் 1,15,412.38 கோடியாக இருந்த மொத்த நிலுவைக் கடன் அளவு 2021-22-ம் ஆண்டில் 5,70,189.29 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடன் அளவு 4.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.
வருவாய் பற்றாக்குறை :

2011-12 முதல் 2015-16 வரை அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டு கால வருவாய் பற்றாக்குறை 17,058 கோடியாக இருந்தது. 2016-17 முதல் 2020-21 வரை ஆட்சியில் ஐந்தாண்டு கால வருவாய் பற்றாக்குறை 1,55,246 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்தின் மீதுள்ள கடன் :
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் பொதுக்கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்துறை மற்றும் போக்குவரத்துத்துறை கடன் :
போக்குவரத்துத்துறையும், மின்துறையுமே தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்குவதாக பெரிதும் கூறப்படுவதுண்டு. இவ்விரு துறைகளையும் சேர்த்தே 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் தொகை இருக்கிறது.

வெள்ளை அறிக்கையில், 2020-21 வரையில் மின்துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் 82, 916 கோடியாகவும் , மின்துறையில் நிலுவையில் உள்ள கடன்கள் 1,59,668 கோடியாகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் 4 ,642 கோடியாகவும், நிலுவையில் உள்ள கடன்கள் 11,840 கோடியாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாங்கி இருக்கும் கடன்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக மட்டுமே கட்டி வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.