YouTurn

2020-ல் அரசியல் கட்சிகள் தொடர்பாக யூடர்ன் கண்டறிந்த புரளிகளின் புள்ளி விவரம் !

2020-ல் அரசியல் கட்சிகள் தொடர்பாக யூடர்ன் கண்டறிந்த புரளிகளின் புள்ளி விவரம் !
இந்திய சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் சார்ந்தப் புரளி செய்திகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டில் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த எண்ணற்ற புரளிகள் செய்திகளை நாம் கண்டறிந்து உள்ளோம். இவற்றில், அரசியல் கட்சிகள் தொடர்பாக நாம் கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்திய புரளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை இங்கே காண்போம்.

ஆதரவாக பரப்பப்பட்ட பொய்கள் : 

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அதன் ஆதரவு பக்கம்/ சார்பாளர்கள்/ ஆதரவாளர்கள்/ தொண்டர்களால் பரப்பப்பட்ட பொய் செய்திகளை பொய் என நிரூபித்து நாம் வெளியிட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை மொத்தம் 31.











































கட்சிஆதரவான பொய்கள்
திமுக6
அதிமுக3
பாஜக19
மக்கள்  நீதி மய்யம்0
ரஜினி2
பாமக0
காங்கிரஸ்1
நாம் தமிழர் கட்சி0
விடுதலை சிறுத்தைகள் கட்சி0

 

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான பொய் செய்திகள் குறித்து வெளியிட்ட கட்டுரைகளில், பாஜக (19), திமுக (6), அதிமுக(3), ரஜினி(2), காங்கிரஸ்(1) எண்ணிக்கை கொண்ட கட்டுரைகளை நாம் வெளியிட்டு உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் பரப்பிய 19 பொய் செய்திகளை நாம் பொய் என நிரூபித்து உள்ளோம். இதனை சதவீத அடிப்படையில் கீழே காணலாம்.



எதிராக பரப்பப்பட்ட பொய்கள் : 

அரசியல் கட்சிகளுக்கு எதிராக எதிர் கட்சியினரின் ஆதரவு பக்கங்கள்/ ஆதரவாளர்கள்/ தொண்டர்களால் மற்றும் பிறரால் பரப்பப்பட்ட பொய் செய்திகளை பொய் என நிரூபித்து நாம் வெளியிட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை மொத்தம் 72.















































கட்சிஎதிரான  பொய்கள்
திமுக13
அதிமுக11
பாஜக27
மக்கள் நீதி மய்யம்2
ரஜினி4
பாமக1
காங்கிரஸ்7
நாம் தமிழர் கட்சி3
விடுதலை சிறுத்தைகள் கட்சி2
கம்யூனிஸ்ட்2

 

இதில், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான 27 பொய் செய்திகளும், திமுகவிற்கு எதிரான 13 பொய் செய்திகளும், அதிமுகவிற்கு எதிரான 11 பொய் செய்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், மக்கள் நீதி மய்யம்(2), ரஜினி(4), பாமக(1), காங்கிரஸ்(7), நாம் தமிழர் கட்சி(3), விடுதலை சிறுத்தைகள் கட்சி(2), கம்யூனிஸ்ட்(2) உள்ளிட்டவையும்அடங்கும். இதனை சதவீத அடிப்படையில் கீழே காணலாம்.



2020-ல் மட்டும் பாஜகவிற்கு ஆதரவாக பரப்பப்பட்ட பொய்கள் தொடர்பாக 19 கட்டுரைகளும் மற்றும் பாஜகவிற்கு எதிராக பரப்பப்பட்ட பொய்கள் தொடர்பாக 27 கட்டுரைகளும் என ஆகிய இரண்டிலும் பாஜக கட்சி தொடர்பான புரளி செய்திகளே அதிகம். அடுத்ததாக, திமுகவிற்கு ஆதரவான 6 பொய் செய்திகளையும், எதிரான 13 பொய் செய்திகளையும் தெரியப்படுத்தி உள்ளோம். அதேபோல், அதிமுக தொடர்பான பொய் செய்திகள் குறித்தும் வெளியிட்டு உள்ளோம்.

இதுதவிர, சிறு மற்றும் புதிய கட்சிகளான கம்யூனிஸ்ட், நாம் தமிழர் , மக்கள் நீதி மய்யம், பாமக போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக குறைந்த அளவிலான பொய் செய்திகளே பதிவாகி உள்ளன அல்லது மக்கள் கவனம் பெறாமலும் செய்திகள் மறைந்து விடுகின்றன.

இது தொடர்பான கட்டுரைகளின் விவரங்களைத் தொகுத்த தரவுகள் - எக்ஸ்செல் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவே ஆதரவாக மற்றும் எதிராக பரப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொய் செய்திகளை பொய் என பாரபட்சமின்றி யூடர்ன் ஆதாரத்துடன் நிரூபித்து கட்டுரைகளை வெளியிட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, மறைமுகமாகவோ அல்லது கொள்கை சார்ந்தும் பரப்பிய நூற்றுக்கணக்கான அரசியல் பொய் செய்திகளை நாம் உடைத்து உள்ளோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிவரும் ஆண்டிலும், சமூக வலைதளங்களில் பரவும் அரசியல் சார்ந்த பொய் செய்திகள் மட்டுமின்றி அனைத்து விதமான பொய்களை உடைந்து மக்களுக்கு சரியான செய்தியை கொண்டு சேர்க்கும் பயணத்தை தொடர்கிறோம் !
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை