YouTurn

கேரளா No.1, தமிழ்நாடு No.2 : 2020-21 நிதி ஆயோக் தரவரிசையில் தென்னகம் கலக்கல் !

கேரளா No.1, தமிழ்நாடு No.2 : 2020-21 நிதி ஆயோக் தரவரிசையில் தென்னகம் கலக்கல் !
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களின் முன்னேற்றத்தைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி ஆயோக் இணைத்து இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21-ன் மூன்றாம் பதிப்பை(அறிக்கை) வெளியிட்டு உள்ளன.

கல்வி, சுகாதாரம், பாலினம், பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு தரவரிசை கணக்கிடப்படுகிறது. இந்த அறிக்கை 2030 திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச இலக்குகளின் விரிவான தன்மை மற்றும் தேசிய முன்னுரிமையை தெளிவாக எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது.


2020-21 நிதி ஆயோக் தரவரிசை மாநிலங்களுக்கான பட்டியலில் (16 இலக்குகளின் ஓட்டுமொத்த புள்ளிகள்) கேரளா 75 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேசம் தலா 74 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், 72 புள்ளிகள் உடன் ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து உள்ளன. பீகார், அசாம், ஜார்கண்ட் மாநிலங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளன. பீகார் 52 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது.



வறுமை ஒழிப்பு பிரிவில், தமிழ்நாடு 86 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வறுமை ஒழிப்பில் மிகக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. அந்த பிரிவில் பீகார் 32 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.











































இலக்குகள் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் 
வறுமை ஒழிப்புதமிழ்நாடு
பசியின்மைகேரளா மற்றும் சண்டிகர்
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுகுஜராத் மற்றும் டெல்லி
தரமான கல்விகேரளா மற்றும் சண்டிகர்
பாலின சமநிலைசத்தீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சுத்தமான குடிநீர் வழங்கல்கோவா மற்றும் லட்சத்தீவுகள்
எரிசக்திஆந்திரா, கோவா, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் (100 புள்ளிகள்)
வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சிஇமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர்
தொழிற்சாலை, உள்கட்டமைப்புகுஜராத், டெல்லி



2020-21-ல் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ்நாடு பெற்றுள்ள புள்ளிகள் :

மாநிலங்கள் அளவில், தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் 86 புள்ளிகள்(முதலிடம்), பசியின்மை 66 புள்ளிகள்(7ம் இடம்), ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 81 புள்ளிகள்(3-ம் இடம்), தரமான கல்வி 69 புள்ளிகள் (5-ம் இடம்), பாலின சமநிலை 59 புள்ளிகள்(4-ம் இடம்), சுத்தமான குடிநீர் 87 புள்ளிகள் (9-ம் இடம்), வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி 71 புள்ளிகள் (4-ம் இடம்) உடன் உள்ளன.



இந்தியாவின் ஒட்டுமொத்த SDG மதிப்பெண் 6 புள்ளிகள் உயர்ந்து உள்ளதை 2020-21 பட்டியல் காண்பிக்கிறது. 2019-ல் 60 ஆக இருந்த புள்ளிகள் 2020-ல் 66 ஆக உயர்ந்து உள்ளது.

Link :

SDG INDIA Index & Dashboard 2020-21

sdg-india-index-2020-21-released-know-top-performing-states-uts
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை