YouTurn

ஹீலர் பாஸ்கர் கைது !

இவர் எந்த வித மருத்துவப் பட்டமும் பெறாத நபர் . ஆனால் தொடர்ந்து பல மருத்துவ விசயங்களை பேசி வந்தவர் . பேச்சில் வித்தகர் பல நாட்டு மக்களும் இவர் பேச்சை ரசிப்பது அவரை அப்படியே பின்பற்றுவார்கள் . இல்லுமினாட்டி என்ற விஷயம் பல ஆண்டுகளாக பல நாடுகளில் பேசப்படுகிறது ஆனால் தானே ஆராய்ந்து கண்டுபிடித்ததாக...

இவர் எந்த வித மருத்துவப் பட்டமும் பெறாத நபர் . ஆனால் தொடர்ந்து பல மருத்துவ விசயங்களை பேசி வந்தவர் . பேச்சில் வித்தகர் பல நாட்டு மக்களும் இவர் பேச்சை ரசிப்பது அவரை அப்படியே பின்பற்றுவார்கள் . இல்லுமினாட்டி என்ற விஷயம் பல ஆண்டுகளாக பல நாடுகளில் பேசப்படுகிறது ஆனால் தானே ஆராய்ந்து கண்டுபிடித்ததாக சொல்கிறார் இவர் . இந்நிலையில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சரி என்றும் , மருத்துவர் தேவையில்லை என்றும் தொடர்ந்து பேசி வந்தார் . இங்கு சீசேரியன் அதிகம் பார்க்கப்படுகிறது என்பதை மட்டும் வைத்து இங்கு வியாபாரம் ஆக்கப்பட்ட மருத்துவத்தில் உள்ள சிக்கலை வைத்து மக்கள் இருக்கும் கோபத்தை விஞ்ஞானத்திற்கு எதிராகவே பேசி திசை திருப்பி விட்டார் ! 



நமது பார்வை :



அலோபதி மருத்துவ முறையை பின்பற்றும் பல வெளிநாடுகளில் சுகபிரசவத்திற்கு அதிகம் முயற்சிக்கும் போது இங்கு ஏன் அப்படியில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை . அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிக்கிச்சை , இலவச பிரசவம் . இங்கு முறையான சிகிச்சை பெறுவதற்குகூட பண உதவி செய்கிறது அரசு ! இப்படி பல்வேறு உதவிகள் செய்து வீட்டில் பிரசவம் பார்த்து உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தொடர் முயற்சியால் , உலக அளவில் பிரசவிக்கும் போது தாயின் மரண சதவிகித்தை விட இந்தியாவில் குறைவு என்ற நிலை ! அதிலும் தென்னிந்தியாவில் மிகக் குறைவு என்ற நிலை ! MMR தொடர்ந்து குறைத்துக் கொண்டு வருகிறோம்  என்பது எல்லாம் Data க்கள் சொல்லும் தகவல் ! இப்படியான நிலையில் வீணாக முறையாக மருத்துவம் தெரியாத நபர்களை நம்பி உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது .



அலோபதி விரும்பாதவர்கள் பிற மருத்துவமான சித்தா , ஆயுர்வேத போன்ற மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறலாம் . முறையாக படித்தவர்களிடம் . சீசேரியன் தான் சிக்கல் பயம் எனில் அரசு மருத்துவமனையை அணுகலாம் ! பெரும்பாலும் அங்கு சுகப்பிரசவமே . 



இதை விடுத்து வீட்டில் பிரசவம் பார்ப்பது எப்படி என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார் . இங்கு இது போன்ற அங்கீகாரம் அற்ற ஆட்கள் செய்வதை சட்டம் எதிர்கிறது . என்பதை நினைவில் வைக்கவும்.


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை