YouTurn

சன்னி லியோன் மற்றும் கிறிஸ்டியன் ரொனால்டோ கேரள நிவாரண நிதி வழங்கினார்களா ? இல்லையா ?

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு பலதரப்பு மக்கள் நிதி உதவி அளித்து வருகையில் திரைத்துறையினரும் தங்களின் பங்கிற்கு நிதி அளித்து வருகின்றனர். இதில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது பங்கிற்கு கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்கள்...

சன்னி லியோன் மற்றும் கிறிஸ்டியன் ரொனால்டோ கேரள நிவாரண நிதி வழங்கினார்களா  ? இல்லையா ?

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு பலதரப்பு மக்கள் நிதி உதவி அளித்து வருகையில் திரைத்துறையினரும் தங்களின் பங்கிற்கு நிதி அளித்து வருகின்றனர். இதில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது பங்கிற்கு கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்கள், பதிவுகள் என வைரலாகி கொண்டிருக்கிறது. சிலர் மிகைப்படுத்தி ரூ.60 கோடி வழங்கினார் என்றும் மீம் பதிவிடுகின்றனர்.



மலையாள தேசத்திற்கு வந்த பொழுது சன்னி லியோனுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆகையால், மலையாள மக்கள் மீது அவருக்கென்று தனி மதிப்பு இருப்பதாகவும், இழிவாக நினைப்பவர்கள் மத்தியில் உதவும் எண்ணம் கொண்டவர் என்றும் சன்னி லியோன் பற்றி உயர்வான கருத்துக்கள் இணையத்தில் அதிகம் பேசப்படுகிறது. 





நடிகர்கள் வழங்கும் நிதியுதவி பற்றி அவர்களின் தரப்பிலோ அல்லது நிதி பெறுபவர்கள் மூலமோ அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சன்னி லியோன் விசயத்தில் அவ்வாறான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. 





" சன்னி லியோன் அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கேரள நிவாரணத்திற்கு 5 கோடி நிதி அளித்ததை உறுதிப்படுத்த எந்தவொரு பதிவும் இல்லை. கேரளா முதல்வர் தன் ட்விட்டர் பக்கத்தில் கேரளா வெள்ள பாதிப்பிற்கு உதவுமாறு ட்விட் செய்து இருந்தார். அதை Retweet மட்டும் செய்துள்ளார். மற்றப்படி நிதி வழங்கியது பற்றி எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை "



அதேபோல், நிவாரண நிதி பெறுபவர்களிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இணைய செய்திளை தவிர ஊடகம், செய்தித்தாளில் சன்னி லியோன் பற்றிய செய்தியும் இடம்பெறவில்லை. ஆனால், சன்னி லியோன் நிதி அளித்து விட்டார் என்றும், ஆனால் அது பற்றி அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.



சன்னி லியோன் கேரளாவிற்கு நிதி அளித்தாரா ? இல்லையா ? என அவரே அதிகாரப்பூர்வ தகவல் அளித்தால் மட்டுமே சர்ச்சை விலகும். 





கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ கேரளா நிவாரண நிதிக்கு ரூ. 77 கோடி வழங்கியதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அவருடைய சமூக வலைத்தள பக்கங்களில் எதுவும் குறிப்பிடவில்லை அதிகாரபூர்வமாக அறிவிப்பும் செய்தியும் வெளியாகவில்லை . இதற்கு முன்பே சில நிகழ்வுகளில் இவர் நன்கொடை வழங்கியதாக புரளி பரவின. அதுபோல தான் இதுவும். பெயர் தெரியாமல் உதவுவோர் பலர் இருக்க இது போன்று போலியான பாராட்டுகளும் வதந்திகளும் இந்நேரத்தில் அவசியமற்றது.



Fan's waitingfor sunny leone's reply ? 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை