YouTurn

கேரளா மக்களுக்கு உதவ தயாரா ? போலியான கணக்குகளை நம்ப வேண்டாம்..!

கேரளாவில் வெள்ள பாதிப்பால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என தேவையானவற்றை அளிக்க தன்னார்வு அமைப்புகள், பிற மாநில அரசுகள், மக்கள் என பலரும் உதவி செய்து வருகிறனர். பாதிப்பில் இருந்து...

கேரளா மக்களுக்கு உதவ தயாரா ? போலியான கணக்குகளை நம்ப வேண்டாம்..!

கேரளாவில் வெள்ள பாதிப்பால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என தேவையானவற்றை அளிக்க தன்னார்வு அமைப்புகள், பிற மாநில அரசுகள், மக்கள் என பலரும் உதவி செய்து வருகிறனர்.



பாதிப்பில் இருந்து மீண்டு வர நிவாரண நிதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். பல மாநில அரசுகள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் சாமானிய மக்கள் உள்பட பலரும் நிவாரண நிதிக்கு முடிந்த தொகையை அளித்து வருகிறார்கள். இது குறித்த தகவல்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



இதற்கிடையில், கேரள மக்களுக்கு உதவுவதாக கூறி கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதி பெறும் வங்கி கணக்கு என்று மேற்கோள்காட்டி ஒருவர் மோசடி செய்துள்ளார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட விஜய் குமார் “ Chief minister’s distress relief fund “ என்றுக் கூறி தனது வங்கி கணக்கின் எண்ணை இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். 





" இதை கண்டறிந்த கேரள போலீசார் விஜய் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வரின் வெள்ள நிவாரண நிதி பெறும் வங்கி கணக்கு என விஜய் குமார் அளித்தது திருவனந்தபுரம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கணக்காகும். அதனை பிளாக் செய்யுமாறு திருவனந்தபுரம் இன்ஸ்பெக்டர் மனோஜ் வங்கியை தொடர்புக் கொண்டு வலியுறுத்தி உள்ளார் "



கேரள மக்களுக்கு உதவ தமிழக மக்கள் தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், நாம் அளிக்கும் பணம் சரியாக செல்கிறதா என்பதையும் அறிதல் அவசியம். உங்களுக்கு நன்கு அறிமுகமான NGO-க்கள் , நபர்கள் மூலம் உதவுங்கள். Sticker boys களிடம் சிக்க வேண்டாம். பணம் எந்த முறையில் சென்றடைகிறது என்பதையும் உறுதி செய்வது அவசியம். இங்கு அரசாங்க உதவியே சரியாக இருப்பதால் அந்த கணக்கில் பணம் அனுப்புவதே நலம்.



முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு பணம் செலுத்தி உதவலாம். பங்களிப்பை அளிக்க donation.cmdrf.kerala.gov.in எனும் தளத்திற்கு சென்று நன்கொடை படிவத்தை நிரப்பி email  மற்றும் தொலைபேசி எண் கொடுக்கவேண்டும் . நன்கொடையை debitcard, creditcard மற்றும் நெட் பேங்கிங்  மூலம் செலுத்தலாம்.



காசோலை/வரைவோலை அல்லது இன்டர்நெட் பாங்கிங் மூலம் அளிக்க:



The Principal Secretary (Finance) Treasurer,



Chief Minister’s Distress Relief Fund,



Secretariat,



Thiruvananthapuram – 695001



ஆன்லைன்  நன்கொடை அளிக்க :



கணக்கு எண் : 67319948232



வங்கி : State Bank of India



கிளை : City branch, Thiruvananthapuram



IFS Code: SBIN0070028



PAN: AAAGD0584M



நன்கொடை பெறுபவர் பெயர்: CMDRF



மெய்யறிந்து உதவுங்கள்..! 



 



TN man urges people to donate for Kerala relief, but posts his account details


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை